சத்தியமா விஜய் அப்படி பண்ணுவாருன்னு நான் நெனைக்கல.. சொல்லாமலே இருந்திருக்கலாம்.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..

சத்தியமா விஜய் அப்படி பண்ணுவாருன்னு நான் நெனைக்கல.. சொல்லாமலே இருந்திருக்கலாம்.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..

ஹோம்லி லுக்கிற்கு பக்காவாக பொருந்தும் முகஜாடை கொண்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டிருந்தாலும் வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான் என்பதால் அழகு தமிழ் பெண்ணாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

அம்மா மேனகா சுரேஷ், பாட்டி சரோஜா என திரைத்துறை சேர்ந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சுலபமாக படவாய்ப்புகளை பெற்று சினிமாவில் அறிமுகம் ஆகிவிட்டார். ஆனால், தொடர்ந்து அவரின் திறமையால் தான் சினிமாவில் அடுத்தடுத்த ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயின் ஆவதற்கு முன்னர் 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அதன் பிறகு 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.அந்த படம் தான் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் உடன் ஜோடி போட்டு ரஜினி முருகன் திரைப்பதில் நடித்து மாபெரும் ஹிட் கொடுத்தார்.

தொடரி, ரெமோ, பாம்பு சட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சாமி 2 , நடிகையர் திலகம், சாணிக்காயிதம், மிஸ் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது கணேஷ் ராஜ் இயக்கத்தில் கண்ணிவெடி திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கிறார்.

இதனிடையே கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். விஜய் – கீர்த்தி சுரேஷ் ரகசியமாக காதலித்து வருவதாகவும் இவர் இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப்போவதும். பல கோடி மதிப்புள்ள கார் ஒன்றை கீர்த்தி விஜய் பரிசாக கொடுத்ததாகவும் டிசைன் டிசைனாக செய்திகள் வெளிவந்து கோலிவுட்டையே பரபரப்பில் ஆழ்த்தியது.

keerthy suresh vijay

அவ்வளவு ஏன் விஜய் கீர்த்தி சுரேஷ் உடன் நெருக்கமாக பழகி தான் தனது மனைவி , பிள்ளைகளை பிரிந்துவிட்டதாகவும் அரசியலில் குதித்து எம்ஜிஆர் – ஜெயலலிதா ஜோடி போன்று விஜய் – கீர்த்தி சுரேஷ் வலம் வருவார்கள் என்றெல்லாம் மீம்ஸ் சித்தரித்து செய்திகள் பறக்கவிட்டனர் நெட்டிசன்ஸ். ஆனால் லியோ படத்தில் திரிஷாவுடன் ஜோடிபோட்டு அந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் விஜய்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் , பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த கீர்த்தி சுரேஷிடம் ஆங்கர், நடிகையர் திலகம் திரைப்படத்தில் விஜய் சார் உங்களின் நடிப்பை பார்த்து வியந்து சர்க்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாராட்டினார். பெரிய லெஜெண்ட் அவ்வளவு பெரிய விழாவில் உங்களை பாராட்டியது எப்படி இருந்தது? என கேட்டதற்கு,

keerthy suresh

விஜய் அப்படி சொல்லுவார்னு நான் எதிர்பார்க்கல…..அன்னைக்கி அவர் அப்படி சொல்லாம கூட இருந்துருக்கலாம்… ஆனால், அந்த ஸ்டேஜ்ல அப்டி சொல்லுவார்னு சத்தியமா நான் நினைக்கல. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. என்னை மென்சன் பண்ணி பேசினது ரொம்ப பெருமையாக இருந்தது என கீர்த்தி சுரேஷ் கூறினார். இந்த throwback வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

   

--Advertisement--