எல்லா காலங்களிலுமே தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு இசையமைப்பாளராக இருந்து வருபவர் இளையராஜா. சினிமாவில் கருப்பு வெள்ளை காலகட்டம் முடிந்து கலர் சினிமா காலகட்டம் துவங்கிய சமயத்தில் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இளையராஜா.
அவரது முதல் திரைப்படமான அன்னக்கிளி திரைப்படத்தில் துவங்கி இப்பொழுது வரை அவரது பாடல்களுக்கு இருக்கும் வரவேற்பு என்பது குறையவே இல்லை. அன்னக்கிளி திரைப்படம் வெளியான காலகட்டங்களில் இளையராஜாவின் பாட்டு மட்டும்தான் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றதாக இருந்தது.
இளையராஜா
அப்பொழுது வேறு எந்த இசையமைப்பாளர்களுக்கும் இளையராஜாவிற்கு இருக்கும் அளவிற்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் இளையராஜாவிற்கு சினிமாவில் ஒரு பெரிய தடையாகப் பிறகு வந்தது ஏ.ஆர் ரகுமான் என்று ஒரு பேச்சு உண்டு.
ஏனெனில் அதுவரை இளையராஜா ஹார்மோனியம் மாதிரியான பழைய இசை கருவிகளை பயன்படுத்திதான் இசை அமைத்து வந்தார் இந்த பாரம்பரிய கருவிகளை விடுத்து ஆங்கில இசை கருவிகளை பயன்படுத்தி ஏ.ஆர் ரகுமான் புதுவித இசைகளை கொடுக்கத் தொடங்கினார்.
கேள்வியால் வந்த வினை
ரோஜா திரைப்படம் வெளியான பிறகு ஏ.ஆர் ரகுமானுக்கு ஒரு பெரிய மார்க்கெட் உருவானது. அப்போது இருந்த இளம் தலைமுறை ஏ ஆர் ரகுமானின் பாடல்களை கேட்க துவங்கினர். இதனை அடுத்து ஏ ஆர் ரகுமானுக்கு வெகுவாக வாய்ப்புகள் வரத் துவங்கின.
குறிப்பாக மணிரத்தினம் ஷங்கர் மாதிரியான சில இயக்குனர்கள் மொத்தமாக இளையராஜா பக்கமே வராமல் ஏ.ஆர் ரகுமானை மட்டுமே வைத்து இசையமைக்கத் தொடங்கிவிட்டனர். பொதுவாகவே இளையராஜாவிற்கு கொஞ்சம் கர்வம் உண்டு என்று தமிழ் சினிமாவில் ஒரு பேச்சு உண்டு.
மேடையில் நடிகைக்கு அவமானம்
அந்த வகையில் ஒரு பேட்டியில் இளையராஜா ஏ.ஆர் ரகுமான் பிரச்சனையால் ரகுவரனின் மனைவியான நடிகை ரோகிணி பாதிப்புக்கு உள்ளான சம்பவம் நடந்திருக்கிறது. ஒரு மேடையில் இளையராஜா இசை கச்சேரி நடத்தும் பொழுது இயக்குனர் ஷங்கர் அந்த விழாவிற்கு வந்திருந்தார்.
அப்பொழுது ஷங்கர் மேடையில் ஏறி பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவரிடம் நடிகை ரோகினி நீங்களும் இளையராஜாவும் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று எங்களுக்கு ஒரு ஆசை உண்டு. அது நடக்குமா சார் என்று கேட்டார். உடனே அது இளையராஜாவிற்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.
ஏன் இந்த மாதிரி கேள்விகளை எல்லாம் அவரிடம் கேட்கிறீர்கள். அவருக்கு பிடித்த இசையமைப்பாளரை வைத்து படங்களில் இசையமைத்து வருகிறார் அவரை எதற்கு நீங்கள் கம்பெல் செய்கிறீர்கள் என்று கோபமாக பேச துவங்கி விட்டார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஏ.ஆர் ரகுமான் ஷங்கரின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைப்பது தான் இளையராஜாவின் இந்த கோபத்திற்கு காரணம் என்று கூறுகின்றனர்.