தெலுங்கில் நாகார்ஜூனா நடித்து வரும் கோஸ்ட் படத்தில் நாயகியாக நடிக்க காஜல் அகர்வாலர் கமிட்டாகியிருந்தார். ஆனால் அவர் கர்ப்பமானதை அடுத்து அதுகுறித்து தயாரிப்பாளரிடம் சொல்லிவிட்டு அப்படத்தில் இருந்து விலகி விட்டார். அதையடுத்து காஜல் நடிக்கயிருந்த வேடத்தில் இலியானா கமிட்டாகியிருப்பதாக ஒரு செய்தி வெளியாகி வந்தது.
ஆனால் அந்த செய்தியை கோஸ்ட் படக்குழு மறுத்துள்ளது. காஜல் அகர்வால் நடிக்கயிருந்த வேடத்தில் நடிக்க இலியானாவை ஒப்பந்தம் செய்யவில்லை என்று கூறியிருக்கும் அவர்கள் வளர்ந்து வரும் சில நடிகைகளிடத்தில் பேச்சுவார்த்தையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதோடு, கோஸ்ட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்க உள்ளது.
அதற்குள் காஜல் வேடத்திற்கு ஒரு நடிகையை தேர்வு செய்து விடவேண்டும் என்று படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வரிகளை பகிர்ந்துள்ளார். இனிய ஆண்களே.. சாம்பல் நிற தாடியே செக்ஸியாத்தான் இருக்கு.. அதை அப்படியே விட்ருங்க.. நான் ஒன்னும் சின்னப்பொண்ணு இல்லை வளர்ந்த A**-ஐ கொண்ட பெண் என்று கூறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், இனிய வளர்ந்த A**-ஐ கொண்ட பெண்களே.. ஆண்கள் எப்படி இருக்க வேண்டும் நீங்கள் ஆர்டர் போட வேண்டாம். இது நாங்கள், எங்களுடைய ஸ்டைல்.. எங்கள் உரிமை.. என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள்.