நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் உணவுகள்.

 

வளர்ந்து வரும் விஞ்ஞான காலத்தில் இன்றைய தலைமுறையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது  சற்று குறைவாக இருக்கிறது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டிய கால கட்டத்தில் தான் இருக்கிறோம். இதற்கு அவர்களின் உணவு பழக்க வழக்கங்களே முக்கிய காரணமாக இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் உணவுகள்

  1. துரித உணவு

நாக்கு சுவைக்கு அடிமையாகிய இளைஞர்கள் எண்ணற்ற வேதிப்பொருள்கள் நிறைந்த மசாலாக்கள் கலந்த துரித உணவுளை விரும்பி உண்பதால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். பிட்சா, பர்கர், ஃபிரைஸ் போன்ற துரித உணவில் அதிக கலோரிகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள், ஊட்டச்சத்து குறைவாக உள்ளதால் முடிந்துவரை துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.

2.பதப்படுத்தப்பட்ட டாப்பாவில் அடைக்கப்பட்ட உணவுகள்

மீன் போன்ற இறைச்சி பொருட்கள் மற்றும் பட்டாணி,உருளைக்கிழங்கு பிரான்ஸ் பிரை போன்ற உணவு பொருட்களை பதப்படுத்தி டாப்பாவில் அடைத்து வைத்திருக்கும் பொருட்களில் தேவையில்லாத நிறமிகள்,

---- Advertisement ----

அதிகப்படியான உப்பு, சர்க்கரை மற்றும் பிற வேண்டாத வேதிச்சேர்க்கைகள் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் முற்றிலும் பலவீனப்படும்.

3.சுத்திகரிக்கப்பட்ட உணவுகள்

வெள்ளை ரொட்டி, பாஸ்தா மற்றும் வெள்ளை மாவு போன்றவை தான் சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் ஆகும்.இந்த 

உணவினை தொடர்ந்து சாப்பிடுவதால் குடல் நுண்ணுயிரியல் பாதையில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவதால் ஆரோக்கியமற்ற குடல் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் சேதப்படுத்தும்.

நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் பொருட்கள்

1.சர்க்கரை

சாக்லேட்டுகள், மிட்டாய்கள் மற்றும் இனிப்பு பண்டத்தில் கலக்கப்படும் சர்க்கரையானது உடல் பருமன், எடை அதிகரிப்பு மற்றும் நீரிழிவு போன்ற நாட்பட்ட நோய்களை ஏற்படுத்துவதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தை காலப்போக்கில் பலவீனமடையச் செய்யும்.

2.உப்பு

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள் அதுபோல உப்பினை அளவோடு பயன்படுத்தினால் வளமோடு வாழலாம் ஏனென்றால் இந்த உப்பானது நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது சக்தி உடையது.சிப்ஸ், பேக்கரி உணவுகளில் உப்பு அதிகமாக இருப்பதால் அதனை குறைந்த அளவு உண்பது நல்லது. அதிகளவில் உப்பினை சேர்ப்பதால் குளுக்கோகார்டிகாய்டு (glucocorticoid ) அளவு அதிகரிக்கும்.

3.வறுத்த மற்றும் பொறித்த உணவுகள்

பிரஞ்சு ஃபிரை, சமோசாக்கள்,  சிப்ஸ், டீப் ஃபிரை செய்யப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளவதால் இதய நோய் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியில் குறைபாடு ஏற்படும்.

4.கஃபைன் மற்றும் மது

அதிக காபி, தேநீர் உட்கொள்வது மது அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும்.

---- Advertisement ----