Actress | நடிகைகள்
இது போதும் ஒரு வாரம் தாங்கும்..! – கவர்ச்சி உடையி பிக்பாஸ் அனிதா சம்பத்..!
அனிதா சம்பத், (Anitha Sampath)டிவி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். அனிதா சம்பத், சில முன்னணி டிவிகளில், சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் செயல்பட்டு இருக்கிறார்.
தெளிவான, அழகான தமிழ் உச்சரிப்பும், பிசிறு தட்டாத அவரது இனிமையான குரல் வளமும், கணீர் என்ற பேச்சுத் தொனியும், அவருக்கு தொடர்ந்து செய்திவாசிப்பாளராக, முன்னணி சேனல்களில் வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் அவருக்கு சிறந்த வாய்ப்பை உருவாக்கித் தந்தது.
Anitha Sampath
செய்தி வாசிப்பின் மூலமாக, குறிப்பிட்ட தரப்பு பார்வையாளர்களை மட்டுமே சென்றடைந்த அனிதா சம்பத், ஒரு கட்டத்தில் விஜய் டிவியில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அதிக ஆர்வம் காட்டினார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்பதால், இதில் ஒரு போட்டியாளராக பங்கேற்பதன் வாயிலாக, அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய முடியும். மேலும், சினிமாவில் நடிக்கும் தனது கனவும் பலிக்கும் என ஆசைப்பட்டு இருக்கிறார் அனிதா சம்பத்.
ஆனால், டிவியில் செய்தி வாசிப்பாளராகவே பணி செய்த போதே சர்க்கார், காலா உள்ளிட்ட சில படங்களில், செய்தி வாசிப்பாளராக அனிதா சம்பத்தை காட்டியிருப்பார்கள். அதிலும், அனிதா சம்பத் டிவியில் செய்தி வாசிப்பாளராகவே காட்டப்படுவார்.
Anitha Sampath
பிக்பாஸ் சீசன் 4, அதாவது 2020ம் ஆண்டில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒரு போட்டியாளராக பங்கேற்றார். துவக்கத்தில், ஒரு ஊடகவியலாளராக அனிதா சம்பத், பார்வையாளர்களின் அதிக கவனத்தை ஈர்த்தார். அவர் சிறந்த ஒரு போட்டியாளராக துவக்கத்தில், காட்டிக்கொண்டார்.
ஆனால், ஒரு கட்டத்தில் அவரது நடவடிக்கைகள் வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு பிடிக்காமல் போனது. சில வேளைகளில், சனி, ஞாயிறு தினங்களில் ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் அந்த வாரம் நடந்த ‘பஞ்சாயத்து’களை கவனிக்க வரும் கமல்ஹாசனையே, அனிதா சம்பத் டென்சன் படுத்தி விடுவதும் நடந்தது.
‘இடைவெளி இல்லாமல், நீங்கள் பேசுவதை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்,’ என்று கமல்ஹாசன் கோபமாக கண்டித்துச் சொல்லும் அளவுக்கு, அதிக பிரசங்கித்தனமாக நடந்துகொண்டதாக, அனிதா சம்பத் மீது ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
Anitha Sampath
இந்நிலையில், அனிதா சம்பத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார். இந்நிலையில், தற்போது ஆரஞ்சு நிற கோட், சூட்டில் கருப்பு நிற பனியனை உள்ளே அணிந்துள்ள நிலையில், செம மாடர்ன் ஆக அனிதா சம்பத், வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
Anitha Sampath
அழகை வர்ணிக்கும் கஜல் பாடல் ஒன்று ஒலித்தபடி இருக்க, அனிதா சம்பத் படிக்கட்டுகளில் ஏறியபடியும், கீழே இறங்கிய படியும், புல்வெளியில் நடந்தபடியும் அசத்தலாக போஸ் தரும் இந்த லேட்டஸ்ட் வீடியோ இப்போது, மிக வேகமாக பரவி வருகிறது.
இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கிறதோ, இல்லையோ ஆனால், நடிகைகளுக்கு சவால் விடும் வகையில், இப்படி கிளாமரான வீடியோக்களை, புகைப்படங்களை அப்டேட் செய்து, சமூகவலைதள வாசிகளுக்கு சந்தோஷத்தை தந்துவிடுகிறார் என்கின்றனர் ரசிகர்கள்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.