நாட்டின் பெயரை BHARAT என மாற்ற திட்டம்..! – ஷேவாக் வெளியிட்ட அதிரடி பதிவு..!

இன்று காலை முதல் நம்முடைய இந்திய நாட்டின் பெயரை மாற்ற இருக்கிறார்கள் என்ற ஒரு தகவல் இணைய பக்கங்களில் தீயாக வரை வருகிறது.

அந்த வகையில் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து இணைய பக்கங்களில் இது சார்ந்த விவாதங்கள் பரபரத்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு பிரபலங்கள் இது குறித்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பாரதம் என்பது தான் நம் நாட்டின் உண்மையான பெயர். இந்தியா என்பது நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களால் நமக்கு கொடுக்கப்பட்ட பெயர். அந்த பெயர் நமக்கு தேவை கிடையாது.

நம்முடைய உண்மையான பெயரான பாரதம் என்பதை மீட்போம். இந்தியாவிற்கு பாரத் என்ற பெயர் வைப்பதை வரவேற்கிறோம் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மறுபக்கம் இந்தியா என்பது இந்தியாவாகவே இருக்கட்டும் எதற்காக பாரதம் என பெயர் மாற்ற வேண்டும் என்று சில பல காரணங்களை முன்வைத்து எதிர் கருத்து தெரிவிப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

இந்நிலையில், பிரபல மட்டைப்பந்து வீரர் விரேந்தர் சேவாக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார்.

கடந்த இரண்டாம் தேதியே இந்த பதிவை எழுதி இருக்கிறார் விரேந்தர் சேவாக். மழை பெய்யும் பொழுது டீயும் பக்கோடாவும் கொண்டு வருகிறார்கள். அப்படியே ஆசிய கோப்பையையும் கொண்டு வந்து விடுங்கள் என ஒரு பதிவை எழுதி இருக்கிறார்.

அதில், #INDvsPAK என்பதற்கு பதிலாக #BHAvsPAK என்று குறிப்பிட்டு ஹேஸ்டேக் போட்டிருக்கிறார். இதன் மூலம் மட்டைப்பந்து வீரர் வீரேந்தர் சேவாவிற்கு பாரத் என பெயர் மாற்றம் செய்யவுள்ள இந்த விஷயம் இரண்டாம் தேதியே தெரிந்திருக்கிறது என ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

#KeralaBoycottLEO – கேரளாவில் லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! – Trend செய்யும் ரசிகர்கள்..! – இது தான் காரணம்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை …