நடுதர மக்களின் எட்டாத கனியாக இருந்த கார் தற்போது சந்தையில் இஎம்ஐ கொடுப்பதினால் அனைவரும் காரினை வாங்கலாம் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். அதிலும் அவர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் கார்கள் இன்று வகைவகையாக சந்தையில் வந்துள்ளது. அவற்றில் 5 லட்சத்தில் கிடைக்கும் கார்களைப் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ரெனால்ட் க்விட்
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் சென்னை ஒரகடத்தில் கார் ஆலையை அமைத்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் குறைந்த விலை கார் க்விட் ரூ. 2.78 லட்சம் விலையில் கிடைக்கிறது. இது குறைந்த விலை பிரிவு கார்களில் இது மிகவும் பிரபலமாகத் திகழ்கிறது. இதில் பிரீமியம் மாடல் விலை ரூ. 4.71 லட்சமாகும்.
டாடா டியாகோ
டாடா மோட்டார்ஸ் நிறுவன தயாரிப்பான இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 3.48 லட்சமாகும். இது 1047 சி.சி. திறன் கொண்டது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் கிடைக்கிறது.
டட்சன் கோ
டட்சன் கோ காரின் ஆரம்ப விலை ரூ. 3.50 லட்சமாகும். இதில் 799 சி.சி. என்ஜின் உள்ளது.
மாருதி ஸ்விப்ட்
பெட்ரோல், டீசல் ஆகிய இரு மாடல்களிலும் வந்துள்ள இக்காரின் ஆரம்ப விலை ரூ. 4.99 லட்சமாகும்.
மாருதி வேகன் ஆர்
மாருதி வேகன் ஆர் மாடலின் பேஸ் மாடல் விலை ரூ. 4.37 லட்சமாகும். இதன் பிரீமியம் மாடல் விலை ரூ. 5.49 லட்சமாகும். 998 சி.சி. திறன் கொண்ட இக்கார் சோதனை ஓட்டத்தில் லிட்டருக்கு 26 கி.மீ. தூரம் ஓடியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்கூறிய குறைந்த விலையில் உள்ள கார்களை வாங்கி உங்கள் நீண்ட நாள் கனவை நீங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றி உங்கள் குடும்பத்தாருடன் உங்களுக்குப் பிடித்த இடத்திற்கு ஒரு ரவுண்டு போகலாமே.