நான்கு முட்டை போதும்.. நாவூறும் சைடிஷ் ரெடி.. ட்ரை பண்ணி பாருங்க..!

சாதம், சப்பாத்தி ஆகியவற்றுடன் தொட்டு சாப்பிடுவதற்கு நாவூரும் இந்த முட்டை கறி ஒரு சிறந்த துணையாக அமையும்.

எப்போதுமே ஒரே மாதிரியான சைடிஷ் சாப்பிட்டு போர் அடித்து போனவர்களுக்கு இந்த முட்டை கறி செய்து கொடுத்துப் பாருங்கள் இன்னும் வேண்டுமென கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

egg curry masala steffi ulagam

அந்த அளவுக்கு ருசியாகவும் பார்த்தாலே எச்சில் ஊறும் வகையிலும் இந்த முட்டை கறி இருக்கும். இந்த முட்டை கறி எப்படி தயாரிப்பது..? என்பதை இந்த சமையல் குறிப்பு மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

முட்டை கறி செய்ய தேவையானவை

  • முட்டை – 4
  • முட்டைகோஸ் – 200 கிராம்
  • உருளைக்கிழங்கு – 200 கிராம்
  • நெய் இரண்டு டேபிள் – ஸ்பூன்
  • எண்ணெய் இரண்டு – ஸ்பூன்
  • கடுகு – தேவைக்கேற்ப
  • கடலைப்பருப்பு – தேவைக்கேற்ப
  • கருவேப்பிலை – சிறிதளவு
  • கொத்தமல்லித்தழை – சிறிதளவு
  • தனி மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

முட்டை கறி செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அனைத்தையும் தூய்மையான முறையில் கழுவி பயன்படுத்தினால் இன்னும் சுவை கூடுதலாக இருக்கும்.

200 கிராம் முட்டைக்கோசை நீலவாக்கில் மெல்லிதாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். 200 கிராம் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு வேகவைத்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து தேவையான எண்ணெய் விட்டு காய விடுங்கள் என்னை காய்ந்ததும் கடுகு மற்றும் கடலை பருப்பு இரண்டையும் போட்டு நன்கு பொரிய விடுங்கள்.

egg curry masala steffi ulagam

பொன்னிறமாக வந்ததும் இவற்றுடன் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து பிறகு துருவிய முட்டைகோஸ் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மசித்து வைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து காரத்திற்கு தேவையான மிளகாய்த்தூள் சேர்த்து நன்று கலந்து விடுங்கள்.

கலந்து விடும்போது இடையிடையே சிறிதளவு நெய் சேர்த்து கலந்து விடுங்கள் இப்போது கமகமவென கலவை தயாராகி இருக்கும். அனைத்தும் ஒன்றுடன் ஒன்றாக நன்று கலந்து முட்டைகோஸ் வெந்து விட்டது என தெரியும்போது சிறிதளவு தண்ணீரை தெளித்து வெந்து வந்த முட்டைக்கோசுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி பிரட்டி விடுங்கள்.

நன்கு உதிரி உதிரியாக முட்டைகள் உதிர்ந்து வரும்போது நறுக்கிய மல்லி தலையை தூவி நன்றாக பிரட்டி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.

egg curry masala steffi ulagam

சுடச்சுட இருக்கும் சாதம் சப்பாத்தி போன்றவற்றுக்கு இதனைத் தொட்டு சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான ருசியில் நாவூறும்.. மிகவும் அருமையான இந்த சைட் டிஷ் சுலபமான முறையில் செய்யலாம்.

உங்கள் வீட்டில் உங்களை எல்லோரும் புகழ்ந்து தள்ளுவார்கள். அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். முட்டையுடன் சிலருக்கு காய்கறி சேர்ப்பது சுத்தமாக பிடிக்காது தான். ஆனால் இந்த முறையில் செய்து பாருங்கள் நிச்சயமாக விரும்பி உண்ணுவார்கள்.

Summary in English : If you’re looking to elevate your dinner game, a delicious egg curry is the perfect dish to impress family and friends. This recipe combines rich spices and creamy textures that will leave everyone asking for seconds.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam