சராசரியாக ஒவ்வொரு மனிதனும் தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் நிம்மதியாக உறங்க வேண்டும். அப்படி உறங்கினால் அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தூக்க இன்மை காரணமாக சிலருக்கு இதய நோய் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மேலும் தொடர்ந்து நீங்கள் ஓய்வெடுக்காமல் உழைக்கும் போது உங்கள் தசைகள் வலிக்க ஆரம்பித்து மூட்டுக்கள், எலும்புகளில் வீக்கம் ஏற்படலாம். இது உங்கள் இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி இதய நோய் பிரச்சனைகளை உருவாக்கும்.
மேலும் தூங்காமல் சில மணி நேரங்கள் மட்டும் நீங்கள் தூங்குவதால் உங்கள் உடல் செயல்பாடுகளில் சீரற்ற தன்மை ஏற்படுவதோடு, ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இரவு உறக்கம் தான் மனிதனுக்கு ஆரோக்கியத்தை அதிகளவு அள்ளித் தருவதற்காக கடவுள் கொடுத்த கொடை என்று கூட நாம் கூறலாம். எனவே சீரற்ற உறக்கம் கொண்டிருப்பவர்கள் கட்டாயம் இதய சம்பந்தமான நோய்களுக்கு ஆளாவார்கள் என்று ஆராய்ச்சிகாலர்கள் கூறியிருக்கிறார்கள்.
மேலும் இன்று கணினி மற்றும் செல்போன்களை அதிகளவு மக்கள் பயன்படுத்தி நேரத்தை செலவழித்து வருகிறார்கள். இரவு நேரங்களில் இது போன்ற திரைகளில் அதிக அளவு நேரத்தை செலவிடுவது தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்துவதோடு செரிமான மண்டலத்தையும் இது பாதிக்கும்.
எனவே இரவு உறங்குவதற்கு முன்பு, சில மணி நேரங்கள் சாப்பிடுவதற்கு முன்பாக நீங்கள் உடற்பயிற்சியை செய்ய முயற்சி செய்யுங்கள். அது முடியவில்லை என்றால் சில யோகாசனங்களை செய்வதின் மூலம் எளிதில் தூங்க முடியும்.
எப்போதும் சரிவிகித உணவை உட்கொள்வதன் மூலம் உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். அதிக அளவு நார்சத்து புரதம் மற்றும் தாதுக்கள் நிரம்பிய உணவை நீங்கள் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
எனவே மேற்கூறிய குறிப்புகளை நீங்கள் மனதில் கொண்டு இரவு நேரம் உங்கள் தூக்கத்தை தட்டி கடிக்காமல் கட்டாயம் தூங்குங்கள். இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.