இனிமே நீ வயசுக்கு வந்தா என்ன..? வராட்டி என்ன..? – தொகுப்பாளினி ஜாக்லின்-ஐ கலாய்க்கும் ரசிகர்கள்..! – என்ன காரணம்..?

சின்னத்திரையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பயணித்து வரக்கூடியவர் நடிகை ஜாக்லின். தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் ரசிகர்கள் மத்தியில் பெற்ற புகழ் இவரை திரைப்படங்களிலும் நடிகையாக்கியிருக்கிறது.

அந்த வகையில், இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருந்தார். ஹீரோயின் போலவே படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரம் என்பதால் இவருக்கு இந்த திரைப்படம் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்று தான் கூற வேண்டும்.

மட்டுமில்லாமல் சீரியலிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். அந்த வகையில் தேன்மொழி பி.ஏ., என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார். தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தன்னுடைய உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் உடற்பயிற்சி கூடத்தில் என்னை மிகவும் கொடுமை செய்வதாகவும் நெஞ்செல்லாம் வலிக்கிறது என்றும் காமெடியான வாக்குமூலம் கொடுத்து ஒரு வீடியோவை பதிவு செய்திருந்தார். அதனை நம்முடைய தளத்தில் பார்த்திருந்தோம்.

அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் இவரிடம் சமீபத்தில் உங்களுக்கு திருமணம் எப்பொழுது நடக்கும் என்று ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு 2045 தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருக்கிறார் ஜாக்லின்.

இதனை கேட்ட ரசிகர்கள் பாட்டி ஆன பிறகு கல்யாணம் பண்ணா என்ன…? பண்ணாட்டி என்ன..? என்று கவுண்டமணி வசனம் போல இனிமே நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

திருமணம் எப்போது செய்து கொள்வீர்கள்…? என்று ரசிகர் ஒருவர் ஒருவர் கேட்டால் அதற்கு பதில் கொடுக்காமல் இதிலும் நக்கலா..? தாங்கள் ரசிக்கும் பிரபலங்கள் குறித்து இப்படியான கேள்விகளுக்கு பதிலை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருப்பது இயல்பு.

ஆனால் அப்படி கேட்கும் கேள்விகளுக்கு கூட நக்கலாக தான் பதில் கொடுப்பீர்களா..? என்று இன்னும் சில ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …