என் காதலியை பார்த்து ரஜினி சொன்ன ஒரு வார்த்தை.. – எனக்கு வெக்கமா போயிடுச்சு..! – ஜாஃபர் சாதிக்..!

நடிகர் ஜாஃபர் சாதிக் ஜெயிலர் படப்பிடிப்பில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்பு தளத்தில் நான் ஒரு பெண்ணை காதலிக்கும் விஷயத்தை பேச்சு வாக்கில் ரஜினி சாரிடம் சொல்லி விட்டார்கள்.

சரி என்று நானும் அவரிடம் என் காதலியின் புகைப்படத்தை காட்டினேன். அதன் பிறகு, நேரில் அழைத்து வாங்க என்று கூறினார். சரி என நானும் அழைத்து சென்றேன்.

என் காதலி-யை பார்த்து உக்காருங்க என்று கூறினார். என்ன சார் உக்கார சொல்றாரு.. டீ, காபி வேணுமா-ன்னு கேக்குறாரு என்னால நம்பவே முடியல-ன்னு என் காதலி மகிழ்ச்சியடைந்தார்.

பிறகு, எப்போ கல்யாணம் பண்ணிக்க போறீங்க.. என்று கேட்டார்.. என் காதலியிடம் என்னை காட்டி ஜென்டில் மேன் என்று கூறினார். எனக்கு ஒரே வெக்கமா போயிடுச்சு.

ரஜினி சார் என்னை ஜென்டில் மேன் என்று கூறிய விஷயத்தை என் நண்பர்களிடம் என் காதலி கூறிவிட்டார்.

இதனை கேட்ட என் நண்பர்கள், என்னது.. நீ ஜென்டில் மேனா..? என்ன நடிப்பு நடிச்சு வச்சிருக்க ரஜினி சார்-கிட்ட என்று கலாய்த்தார்கள்.

ஆனால், பழகும் விதம் தான் இங்கே விஷயம். யார் ஒருவருடனும் நம்முடைய எல்லை என்ன என்பதை தெரிந்து கொண்டு அந்த எல்லைக்குள் இருந்து கொண்டால் நாம் ஜென்டில் மேனாக இருக்கலாம் என்று கூறி சிலாகித்துள்ளார் ஜாஃபர் சாதிக்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …