வாணி போஜன் : நடிகர் ஜெய்யின் குரலுக்கு என்று ஒரு கூட்டமே இருக்கும் என்று கூறும் அளவுக்கு ஒரு வித்தியாசமான குரல் அமைப்பு கொண்ட நடிகர். தற்போது மீண்டும் திரைப்படத்தில் நடிப்பதற்கு தொடங்கியிருக்கிறார். ஏற்கனவே பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய நடிகர் ஜெய் ஒரு சின்ன திரை நாயகியோடு சேர்ந்து கும்மாளம் அடித்து வருவதாகவும், லிவிங் டுகெதர் முறையில் அவரோடு வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் அடிக்கடி வலைதளத்தில் வலம் வந்தது.
அந்த சின்னத்திரை நாயகி வாணி போஜன் அதிகளவு படங்கள் வருவதால் அவர் படங்களில் நடித்து வருவதால் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இந்த செய்திகள் மற்றும் கிசுகிசுக்கள் நிமித்தமாக இவருக்கும் நடிகர் ஜெயிக்கும் எதுவும் இல்லை என்பது போன்ற செய்தியை மறைமுகமாக வாணிபோஜன் கூறி முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
எனினும் ஜெய் தரப்பில் இருந்து இதுவரை அதை சம்பந்தப்பட்ட எந்த ஒரு கருத்தையும் அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலைகள் தான் இவரை இப்படியே விட்டால் சரியாக வராது என்று இவரது பெரியப்பா இசையமைப்பாளர் தேவா இவருக்காக பெண் பார்க்க தொடங்கி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
மேலும் இசையமைப்பாளர் தேவாவே திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்நின்று நடத்தி வருவதாகவும் இந்த சமயத்தை தவறவிட்டால் ஜெய்யை பிடிக்க முடியாது என்பதை உணர்ந்து அவர் தற்போது விறுவிறுப்பாக திருமண காரியங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
மேலும் வீட்டில் உள்ள பெற்றோர்களின் நச்சரிப்பு தாங்க முடியாமல் தான் சமீபத்தில் தனது காதலியை கழட்டிவிட்டு திருமணத்திற்கான பச்சைக் கொடியை இவர் காட்டியிருக்கிறார் என்று பேசப்படுகிறது.
இதை அடுத்து ஜெய் வீடு திருமணக் கோலத்தோடு காட்சி அளிக்கிறது. மேலும் தனது சென்னை இருபத்தி எட்டு நண்பர்களுக்கும் இதை தெரிவித்து பார்ட்டி வைத்து கொண்டாடி வருவதாக தெரிகிறது.
பிள்ளைகள் தடம்மாறி செல்லும்முன்பேஅதற்கு தந்தது போல் கால் கட்டு போட வேண்டும் என்று முன்னோர்கள் இதைத்தான் அன்றே சொன்னார்கள்.