நடிகர் ஜெய்க்கு கை கொடுக்கிறாரா? இயக்குனர் நெல்சன் தீலீப்…. ஜெய்லர் படத்தில் வில்லன் வாய்ப்பா?

இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின்  இயக்கத்தில் உருவாகிவரும் மாபெரும் படைப்பான ஜெய்லர் படத்தில் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

 சுப்ரமணியபுரம், கோவா உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து பெயர் பெற்ற நிலையில் தற்போது  தமிழில்  படங்கள் கைவசம் இல்லாத நிலையில் ஒரு மிகப்பெரிய பிரேக் எடுத்திருந்தார் தமிழ் திரையுலகில் இருந்து நடிகர் ஜெய். இனி இவர் திரைப்படத்தில் தலைகாட்ட மாட்டார் என்று எண்ணி இருந்த நேரத்தில் தற்போது இவருடன் நெல்சன் கைகோர்த்து இருக்கிறார்.

 யாரும் எதிர்பாராத நிலையில் நடிகர் ஜெய்க்கு ஜெய்லர் திரைப்படத்தில் ரஜினிக்கு எதிராக வில்லன் கேரக்டரை தந்து அவரை திரையுலகிற்கு கம்பேக் நிலைக்கு கொண்டு வந்த பெருமை இவரை சாரும்.

 ஏற்கனவே நெல்சன் திலீப் குமாரின் முதல் படமான வேட்டை மற்றும் மன்னன் படத்தில் இவரை வில்லனாக அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்த போதிலும் அது சரியாக செயல்படுத்த முடியாத சூழ்நிலையில் தற்போது சரியான சமயத்தில் இவருக்கு உதவி செய்தது குறிப்பிடத்தக்கதாக இருப்பதாக அனைவரும் பேசி வருகிறார்கள்.

 சமீபத்தில் வெளிவந்த பட்டாம்பூச்சி திரைப்படத்தில் சுந்தர் சியுடன் நடித்த இவர் வில்லனாக தனது கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இதை அடுத்து இவர் ஜெய்லர் படத்திலும் வில்லனாக வலம் வருவது மகிழ்ச்சியான விஷயமே இவருக்கு ஜோடியாக தமன்னா நடிப்பார் என்று தெரிகிறது.

இதனையடுத்து ரசிகர்கள் பலர் சூப்பர் ஸ்டாருக்கு இவர் வில்லனாக நடிப்பதாக இவரது மார்க்கெட் உயர்ந்து இருக்கிறதா? என்றபடி பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.  அருமையான உழைப்பு மற்றும் விடா முயற்சிக்கு உதாரணமாக திகழும் நடிகர் ஜெய் இந்த படத்தில் மிகச் சிறப்பான முறையில் நடித்து தனது திரையுலக பயணத்தை மீண்டும் உறுதி செய்து  திரையுலகிற்கு பறைசாற்றும் நேரம் இது என அனைவரும் கூறுகிறார்கள்.

எனினும் இந்த ஆட்டத்தில் நடிகர் ஜெய் ஜெயிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …