ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்திருக்கிறது.
இதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகிய இருவருக்கும் விலை உயர்ந்த கார்களை வழங்கி கௌரவித்திருக்கிறார்.
மேலும் சம்பளமும் அதிகமாக கொடுத்திருக்கிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு இணைய பக்கங்களில் எந்த அளவுக்கு அடிதடி நடந்து வந்தது என உங்களுக்கு தெரிந்திருக்கும்.
நடிகர் ரஜினிகாந்தே இந்த விவகாரத்தை பற்றி ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசும் அளவிற்கு சென்றது இந்த சூப்பர் ஸ்டார் விவகாரம்.
1970 லிருந்து இந்த சூப்பர் ஸ்டார் என்ற பிரச்சனை என்னை துரத்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நடிகர் இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக என்னை துரத்திக் கொண்டிருக்கிறார் என்று காக்கா கழுகு ஆகிய இரண்டு பறவைகளை பொருளாக கொண்டு ஒரு கதை ஒன்றையும் சொன்னார் நடிகர் ரஜினிகாந்த்.
இதைக் கேட்ட குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள் எங்களுடைய நடிகரை தான் இவர் காக்கா என்று கூறிவிட்டார். என்று களேபரத்தில் ஈடுபட்டனர்.
#Jailer Before & After Scenario 😅
Thalaivar Nirandharam ❤️🤫#JailerHistoricBO | #Jailer | #Rajinikanth𓃵 | #JailerRecordMakingBO | #JailerIndustryHit | #ThalaivarNirandharam | #ThalaivarAlapparai pic.twitter.com/rBnSG1vOjj
— Rajasekar (@prsekar05) September 1, 2023
இப்படி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கும் சில ஆசாமிகள் குறித்து மீம் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. நடக்கக்கூடிய சம்பவங்களுக்கு அப்படியே பொருத்தமாக இருக்கும் அந்த மீம் வீடியோவை நீங்களும் பார்த்து ரசிக்களாமே.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.