சூப்பர் ஸ்டார் ஜெய்லர் படத்தின் தீம் மியூசிக்கை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

எத்தனை வயதானாலும் உன் ஸ்டேயிலும் நீயும் அப்படியே தான் இருக்கும் என்கிற வசனத்தைக் படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் பேசி கேட்டுயிருப்போம். இந்த வசனத்திற்கு ஏற்றபடி ரஜினிகாந்த் தற்போது மக்கள் விரும்பும் ஸ்டைல்ல மீண்டும் ரசிகர்களை குஷிப்படுத்த ஜெய்லரா வந்துட்டாரு.

ரஜினி இடையில் நடித்த பெரும்பாலான படங்கள் அதிக அளவு சோபிக்கவில்லை. ஆனால் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி உள்ளது.

மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் சன்பிக்சர்ஸ் தயாரிக்கின்ற இந்த படத்தை நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர், விஜய்யை வைத்து பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார், இயக்கி வருகிறார்.

இவரும் அனிருத்தும் இணைந்து சமீபத்தில் பீஸ்ட் படத்தில் அரபி குத்துப் பாடல் மூலம் கலக்கி தமிழகத்திலேயே ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தினார்கள்.

அந்த வரிசையில் மேலும் இந்த ஜெய்லர் படத்தில் இதுவரை ரஜினிகாந்தை நீங்கள் பார்க்காத வேடத்தில் காண்பீர்கள் என்று அவர்கள் கூறிய விதம் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வப்போது இப்படத்தை பற்றி வரக்கூடிய சிறிய சிறிய அப்டேட்கள் மூலம் ரசிகர்களது ஆர்வம் மேலும் பல மடங்கு எகிரியுள்ளது.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க உள்ளதாகவும் அதேபோல் நடிகை ரம்யா கிருஷ்ணன், தரமணி பட நடிகர் வஸந்த் ரவி, யோகிபாபு, கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், மலையாள நடிகர் விநாயக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

தற்போது அனிருத் இசையில் படத்துக்கான தீம் மியூசிக்கை அதிகாரப்பூர்வமாக சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இதனை இவரது ரசிகர்கள் பார்த்து  அவரது கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

பலவிதமான மாஸ் ஹீரோக்கள் சங்கமித்து நடிக்கக்கூடிய இந்த ட்ரெய்லர் படம் நிச்சயமாக அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம்  இருப்பதோடு ரசிகர்களின் ஆர்வத்திற்கு தீனி போடுவதாக ரஜினியின் நடிப்பும் ஸ்டைலும் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …