ஜவான் – படம் எப்படி இருக்கு..? – திரைவிமர்சனம்..!

Jawan Movie Review : இயக்குனர் அட்லி இயக்கியுள்ள முதல் பாலிவுட் திரைப்படமான ஜவான் திரைப்படம் எப்படி இருக்கிறது வாங்க பாக்கலாம். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருக்கிறார் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி பலதரப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தின் மீது எக்கச்சக்க எதிர்ப்பார்ப்புகள் இருந்தன.

படத்தின் டிரைலர் பாடல்கள் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிர வைத்திருந்தன.

இதற்கு முக்கிய காரணம் நடிகர் ஷாருக்கான் மற்றும் இயக்குனர் அட்லி கூட்டணி தான் என்று கூறலாம். இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது இந்த படத்தின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை ஏற்கனவே பார்த்து விட்டோம்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாருங்கள்.

ஜவான் கதை என்ன..?

பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில் ஜெயிலராக இருக்கிறார் நடிகர் ஷாருக்கான். தன்னுடைய சிறைச்சாலையில் இருக்கக்கூடிய ஆறு பெண்களை வைத்து மக்களுக்கு எதிராக நடக்கும் தீய செயல்களை ஒழித்துக்கட்டும் விதமாக அரசாங்கத்தை எதிர்த்து போராடுகிற நபராக இருக்கிறார் நடிகர் ஷாருக்கான்.

இந்த கதாபாத்திரத்தின் பெயர் ஆஷாத். மறுபக்கம் தன்னுடைய உண்மையான பெயர் ஆன ஆசாத் என்பதை மறைத்து விக்ரம் ரத்தோர் என்ற அடையாளத்துடன் அரசாங்கத்தை எதிர்க்கிறார் ஷாருக்கான்.

இவருடன் அந்த ஆறு பெண்களும் இப்படி மாறுவதற்கு காரணமாக இருப்பவர் வில்லனாக நடித்திருக்க கூடிய காளி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

வில்லன் விஜய் சேதுபதிக்கும் ஹீரோ ஷாருக்கானுக்கும் இடையே இருக்கக்கூடிய தகராறு என்ன..? மக்களுக்காக போராடிய ஷாருக்கான் மற்றும் ஆறு பெண்களும் அதில் வெற்றி கண்டார்களா..? இல்லையா..? என்பதுதான் படத்தினுடைய மீதி கதையாக இருக்கிறது.

படம் எப்படி இருக்கு..?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் தன்னுடைய நடிப்பு திறமையால் ஒட்டுமொத்த படத்தையும் தன்னுடைய முதுகில் தூக்கி சுமக்கிறார்.

குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் ஒரு பிரம்மாண்டத்தை நம்மால் உணர முடிகிறது. நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமாகி இருக்கிறார். பிசிறு தட்டாமல் தன்னுடைய வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

நடிகை நயன்தாராவிற்கு இந்த படத்தில் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அது நடிகை நயன்தாராவின் சினிமா எதிர்காலத்திற்கு துணை நிற்கும் என எதிர்பார்க்கலாம்.

ஹீரோயின் என்றால் ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்வதற்கும் அவருக்கு அட்வைஸ் கொடுப்பதற்கு மட்டும் இல்லாமல் நடிகை ஷாருக்கானுக்கு நிகரான காட்சிகள் நடிகை நயன்தாராவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

நடிகை தீபிகா படுகோனே கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறியபடியே சில காட்சிகளில் தோன்றி மறைகிறார். மேலும் நடிகர் சஞ்சய்தத்தின் கேமியோ என்ட்றி ரசிகர்களை ஆரவாரத்தில் ஆழ்த்தி விட்டது.

மட்டுமில்லாமல் பிரியாமணி, சன்யா மால்கோத்ரா, லெதர் கான் மற்றும் ஷாருக்கான் குரூப்பில் உள்ள மற்ற பெண்கள் கதைக்கு என்ன தேவையோ அதை அப்படியே கொடுத்திருக்கிறார்கள் என்று கூறலாம்.

படத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்றான யோகி பாபு கதாபாத்திரம் ரசிகர்களை ஏமாற்றி விட்டது என்று கூறலாம். ஏதோ காமெடிக்கு ஒரு ஆளை வைக்க வேண்டும் என்று வைத்திருக்கிறார்கள் போல தெரிகிறது.

தன்னுடைய வழக்கமான பழிவாங்கல் திரைக்கதை தான் இந்த திரைப்படத்திலும் கையாண்டு இருக்கிறார். ஆனால் சற்று சுவாரஸ்யத்தை கூட்டி ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். மாஸான காட்சிகள் சென்டிமென்ட் காட்சிகள் ஆக்சன் காட்சிகள் என அனைத்து விஷயங்களிலும் அட்லியின் டச் தெரிகிறது.

முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் செல்கிறது. இரண்டாம் பாதியில் சற்று நீளமாக இருப்பது போல சிலருக்கு தோன்றலாம். படத்தின் நீளத்தை இன்னும் கூடவே குறைத்து இருந்தால் படம் இன்னுமே விறுவிறுப்பாக இருந்திருக்கும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

படத்தின் அறிமுக பாடல்களை தவிர மற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்களை உச்கொட்ட வைக்கிறது. அட, படத்தை போடுங்கப்பா..? இங்க எதுக்குபா பாட்டு.. என்று சொல்லும் அளவுக்கு அந்த பாடல்கள் அமைந்திருக்கின்றன.

சிலர் மெர்சல் படத்தையும் பிகில் படத்தையும் பட்டி டிங்கரிங் பார்த்திருக்கிறார் அட்லி என்றும் கூறுகிறார்கள். ஆனால் படம் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் ஒரு வலுவான படமாக இருக்கிறது.

குறிப்பாக சண்டை காட்சிகளை படக்குழு படமாக்கி இருக்கக்கூடிய விதம் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். சண்டை பயிற்சியின் நிபுணர் அனல் அரசு, ஒளிபதிவாளர் விஷ்ணு மற்றும் எடிட்டர் ரூபன் ஆகியோரின் உழைப்பை இங்கே பாராட்டிய ஆக வேண்டும்.

படத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளும் இருக்கின்றன. ஆனால் எந்த அளவுக்கு இது மக்கள் மத்தியில் எடுபடும் என்பதை நாட்கள் செல்லச் செல்ல தான் கவனிக்க முடியும்.

இந்த படத்தின் பின்னணி இசை மிகப் பெரிய பலமாக இருக்கிறது. ராக் ஸ்டார் அனிருத் இதனை மிக சாதுரியமாக கையாண்டு இருக்கிறார்.

தொடர்ந்து பாலிவுட் படங்களுக்கும் அனிருத் இசையமைக்க சென்றால் வியப்பதற்கு இல்லை.

ஷாருக்கானுடைய கை தேர்ந்த நடிப்பு, நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆக்சன் காட்சிகள், படத்தின் முதல் பாதி, கேமரா மற்றும் எடிட்டிங் ஆகியவை படத்தின் தரத்தை கூட்டி இருக்கின்றன.

படத்தின் நீளத்தையும் லாஜிக் இல்லாத சில பல காட்சிகளையும் தவிர்த்திருக்கலாமோ..? என்ற எண்ணமும் ஏற்படுகிறது. மொத்தத்தில் இந்த வீக் என்டிற்கு ஜவான் திரைப்படம் நல்ல பொழுது போக்கு படமாக இருக்கும் என்று நம்பலாம்.

JAWAN – TAMIZHKAM RATING

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“யாத்திசை திரைப்படம் எப்படி..?..” – சிறப்பு பார்வை பார்க்கலாமா..?

செல்வன் வெற்றியை தொடர்ந்து வரலாற்றுப் படங்களை படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள் அந்த வரிசையில் மையமாக வைத்து எடுக்கப்பட்ட …