ஜவான் நாயகனும் ஜெயிலர் நாயகனும் சந்தித்தார்களா? இந்த சந்திப்பின் பின்னணி என்ன?

சமீபத்தில் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த்தும் பாலிவுட் ஸ்டார் ஆக இருக்கும் ஷாருக்கானும் சில தினங்களுக்கு முன் சந்தித்து கொண்டார்கள்  இந்த சந்திப்பு எதற்காக நிகழ்ந்தது. இதன் பின்னணி என்ன? என்பதை பற்றி காணலாம்.

ஜாவன் மற்றும் ஜெய்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தான் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வின்  அப்போதுதான் அட்லீ மற்றும் ஷாருக்கான் மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்தை சந்தித்ததாக தெரியவருகிறது.

 ஜவான் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வரும் ஷாருக்கான்  மிகவும் பிரம்மாண்ட முறையில் அவரது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக கூறுகிறார்கள். இந்த படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களை கவரும் வகையில் இருக்கிறது.இந்த படத்தை அட்லீ தான் இயக்கி வருகிறார். தடைகளைத் தாண்டி இந்த படப்பிடிப்பின் படப்பிடிப்பு தற்போது சென்னை பகுதியில் நடந்து வருகிறது.

 இந்தப் படப்பிடிப்பில் மக்கள் நாயகன் விஜய் சேதுபதியும் நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதாக தெரிகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் ஆனது சென்னை ஆதித்ய ராம் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

 இது போலவே சூப்பர் ஸ்டார் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பும்  எதே ஆதித்ய ராம் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. அந்த சமயத்தில் தான் ரஜினியின் தீவிரமான பேன்னான சாருக்கான் அவரை சந்தித்து பேசியதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த சந்திப்பின்போது இயக்குனர் அட்லிக்கும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளிவரத் தொடங்கிவிட்டது. தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அந்த சூட்டிங்கில் இருந்தார்களாம்.

மரியாதை நிமித்தமாக தான் இந்த சந்திப்பு நிகழ்ந்த  ஷாருக்கான் மற்றும் அட்லி தெரிவித்திருக்கிறார்கள். இந்த இரண்டு பெரிய ஜாம்பவான்களின் சூட்டிங் ஒரே பிலிம் சிட்டியில் நடப்பது அனைவருக்குமே மிகுந்த சந்தோசத்தை அளித்துள்ளது. மேலும் இவர்களை காணக் கூடிய வாய்ப்பும் கிடைத்தது மிக பெரும் பாக்கியமாக ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …