sociaty bank job october october

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா..? இதோ உங்களுக்காக..

அரை காசு என்றாலும் அரசாங்க காசு வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிக அளவு இன்றும் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இன்று அட்டகாசமான அரசு வேலை வாய்ப்பு ஒன்றினை பற்றி நமது வலைதளத்தில் நீங்கள் படித்து வேலை வாய்ப்பினை பெற்றால் எங்களுக்கு மகிழ்ச்சி.

வங்கியில் வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு அட்டகாசமான வாய்ப்பு. அதுவும் தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகள் இந்த வாய்ப்பு என்றால் கரும்பு தின்ன கூலி வேண்டுமா? என்று கேட்பீர்கள்.

அட.. அப்படி தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் என்னென்ன வேலை உள்ளது. அந்த வேலைக்கான தகுதி என்ன? என்பது பற்றி இனி காணலாம்.

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலை..

தற்போது தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் பல்வேறு பணி இடங்கள் நிரப்பப்பட உள்ள வேளையில் அதற்கான அறிவிப்பு வந்துள்ளது. அதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அது குறித்த விரிவான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணியிடம் குறித்த விவரங்கள்

பணி: சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் – இரண்டு பேர்

பணி: நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர் – இரண்டு பேர்

பணி: இன்பர்மேஷன் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட் – இரண்டு பேர்

மேலே கூறப்பட்ட இந்த மூன்று பதவிகளுக்கும் 25 வயது முதல் 35-க்குள் வயது வரம்பு இருக்க வேண்டும்.

இந்த பணிக்குரிய தகுதிகள்:

கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று மூன்று முதல் ஐந்து ஆண்டு காலம் பணி அனுபவம் இருத்தல் அவசியம்.

அத்தோடு எம் சி ஏ பட்டம் பெற்று பணி அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

மேலும் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி சிஸ்டம் செக்யூரிட்டி தொடர்பான படிப்பில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணிக்காக தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணிக்காக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்

மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க www.tnscbank.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை தக்க முறையில் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை நகல் எடுத்து இணைத்து கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் அஞ்சல் முகவரியில் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 09.08. 2024 அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Managing Director
Tamilnadu State Apex Co-operative bank Ltd No.4
(Old No.233)
N.S.C.Bose Road Chennai-600 001

தொலைபேசி எண்: 044-25302359,25302335

இ.மெயில் முகவரி:
[email protected]

விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள்: 09.08.2024.

--- Advertisement ---

Check Also

trichy temple job october october

“திருச்சி கோயிலில் வேலைவாய்ப்பு..!” – இந்து அறநிலையத்துறை அறிவிப்பு..!

வேலைவாய்ப்பு: திருச்சியில் உள்ள திருவானைக்காவல், அருள்மிகு ஜம்போகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் சுமார் 7 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்களிடமிருந்து …