ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ஜோதிகா. பெயருக்கு ஏற்றார் போல சற்றே பூசினாற் போல இருக்கும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் தமிழ் சினிமாவில் இருந்தது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை ஜோதிகா.
பிரபல நடிகை நக்மாவின் தங்கையான இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தாலும் தன்னுடைய திறமையை கொண்டு குறுகிய காலத்திலேயே பிரபல நடிகையாக உயர்ந்தார் நடிகை ஜோதிகா.
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்திருக்கும் இவர் முதன் முதலில் அறிமுகமானது இந்திப் படத்தில் தான். இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான டோலி சாஜா கே ரக்னா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை ஜோதிகா.
ஆனால், இந்த திரைப்படம் இவருக்கு பெரிய வரவேற்பு கொடுத்து விடவில்லை. இந்தி சினிமா நமக்கு ஒத்துவராது என்று தென்னிந்திய சினிமாவில் முயற்சி செய்த இவருக்கு தென்னிந்திய சினிமா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தது.
அந்த வகையில் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் உருவான வாலி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஜோதிகா. அதன்பிறகு எஸ் ஜே சூர்யா இயக்கிய இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.
குஷி திரைப்படம் நடிகை ஜோதிகாவை தமிழ் சினிமாவின் உயரத்திற்கு கொண்டு சென்றது. அதன்பிறகு இவர் நடித்த அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
வாலி படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதும் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து இருந்த நடிகை ஜோதிகா நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் சந்திரமுகியாக நடித்திருந்தார்.
இந்த கதாபாத்திரம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நடிகை ஜோதிகா அந்த வகையில் சந்திரமுகி படத்தில் நடித்ததற்காக நடிகை ஜோதிகாவுக்கு தேசிய விருது பரிந்துரை செய்யப்பட்டது.
ஆனால் அவருக்கு அந்த விருது கிடைக்கவில்லை. என்ன காரணம் என்றால்.. ஜோதிகா தேசிய விருதுக்கான பட்டியலில் முதல் மூன்று இடங்களில் வந்து விட்டார். ஆனால், சந்திரமுகி திரைப்படத்தில் நடிகை ஜோதிகா தன்னுடைய சொந்தக் குரலில் பேசவில்லை அவருக்கு பதிலாக டப்பிங் கலைஞர் ஒருவரை பேசியிருக்கிறார்.
இது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்ட அவருடைய பெயர் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இதனால் தனக்கு கிடைக்க வேண்டிய தேசிய விருதை சிறு தவறின் மூலம் தவற விட்டுவிட்டார் என்பது நடந்த உண்மை, இதனால் அந்த சமயத்தில் பெரிய அப்செட் ஆக இருந்தார் நடிகை ஜோதிகா என்பது குறிப்பிடத்தக்கது.