Breaking News

ஜோதிகா முன்னாடியே சூர்யாவுக்கு லவ் லெட்டர் கொடுத்த பெண் இயக்குனர் – ஜோதிகா என்ன கூறியுள்ளார் பாருங்க..!

தமிழ் சினிமாவில் பிரபல ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா ஜோதிகா இடையே உள்ள பல காதல் கதைகளை நாம் கேட்டிருப்போம். ஆனால் இது சற்று கொஞ்சம் வித்தியாசமான கதை.

பிரபல டான்ஸ் மாஸ்டர் ஆக இருக்கும் பிருந்தா மாஸ்டரின் உதவி நடன இயக்குனர் பாபி சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ஜோதிகா முன்பு சூர்யாவிற்கு லவ் லெட்டர் கொடுத்தது அதன் பின் அங்கு நடந்த விஷயங்களையும் ஓப்பனாக கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது காக்க காக்க திரைப் படத்தின் ஷூட்டிங்கின் போது என்னை கொஞ்சம் மாற்றி என்ற பாடலின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டு இருந்தது. நான் சிறுவயதில் இருந்து சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை அவரை ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா..? அவருடன் பேச மாட்டோமா..? என்று பல நாட்கள் ஏங்கி இருக்கின்றேன்.

நல்வாய்ப்பாக, காக்க காக்க திரைப்படத்தின் கோரியோகிராபி என்னுடைய மாஸ்டர் பிருந்தா விற்கு கிடைத்தது. அவருடன் நானும் அந்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்றோம். படப்பிடிப்பின்போது என்னை கொஞ்சம் மாற்றி என்ற பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

சூர்யாவும் ஜோதிகாவும் ஜீப்பில் வரக்கூடிய காட்சியை படமாக்கி கொண்டிருந்த பொழுது படப்பிடிப்பு முடிந்த பிறகு சூர்யாவின் அருகில் சென்று நான் சூர்யா சார் உங்ககிட்ட நான் பேசணும் என்றேன்.

உடனே, அவரும் சொல்லுங்க பாபி.. என்ன விஷயம் என்று கேட்டார் .சார் நான் உங்கள லவ் பண்றேன் இதுல எழுதி இருக்கேன் என்று அவரிடம் நான் எழுதி வைத்திருந்த லெட்டரை நீட்டினேன்.

இதை பார்த்ததும் அருகில் இருந்த ஜோதிகா, பிருந்தா மாஸ்டர், கேமரா மேன் ஆகியோர் பயங்கர ஷாக் ஆகி விட்டனர். சற்றும் யோசிக்காத நடிகர் சூர்யா நான் ஜோதிகாவை லவ் பண்றேன் என்று சிரித்தபடியே கூறினார்.

இதைக் கேட்ட இதைக்கேட்ட ஜோதிகா என்ன பாபி.. கொஞ்சம் முன்னாடியே வந்து சொல்லி இருக்கலாம்ல என்று என்னை கிண்டல் செய்தார். அதற்கு நான் இப்ப கூட ஒன்னும் பிரச்சனை இல்ல.. நான் சூர்யா லவ் பண்றேன்.. நீங்க என்கூட வந்துடுங்க என்று சூர்யாவிடம் விளையாட்டாக சொன்னதாக அந்த பேட்டியில் கூறியுள்ளார் இந்த பேட்டி சூர்யா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

---- Advertisement ----

Check Also

என்னங்கடா கொடும இது.. வீட்டிற்கு வந்த பார்சல்.. பிரித்து பார்த்து ஷாக் ஆன அனிதா சம்பத்..!

தமிழ் செய்தி தொகுப்பாளரும், தமிழ் மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கும் நடிகை அனிதா சம்பத் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய …