ஜோதிகாவுக்கு ரூட்டு விட்ட நடிகர்.. கறார் காட்டிய இயக்குனர்.. யாரு அந்த நடிகர் தெரியுமா..?

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா இடையே சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அதனால் நின்று போன படம் குறித்து அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

வணங்கான் திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் தற்போது ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அருண் விஜய்க்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு மிகப்பெரிய ஒரு ஹிட் படமாக அமையும் என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால் இந்த திரைப்படத்தில் முதன் முதலாக ஹீரோவாக நடித்தது நடிகர் சூர்யா. இயக்குனருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து விலகிக் கொண்டார். நடிகர் சூர்யா சினிமாவில் முன்னணி ஹீரோ நடிகர் சூர்யா என்றாலும் கூட அவருடைய படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வரவேற்பு இருக்கிறதா..? பெரிய ஓபனிங் இருக்கிறதா..? என்றால் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

இதையும் படிங்க : என்ன சொல்றீங்க.. வட சென்னை 2 குறித்த கேள்விக்கு தனுஷ் கொடுத்த அதிர்ச்சி பதில்..!

கடைசியாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஓபனிங் பற்ற திரைப்படம் என்றால் அது அயன் திரைப்படம் தான். அதன் பிறகு எத்தனையோ திரைப்படங்கள் வெளியானாலும் அவை அயன் படத்திற்கு நிகராக செல்ல முடியவில்லை.

பண வீக்கம் காரணமாக அதிக வசூலாவ் சில படங்கள் செய்திருக்கலாம். ஆனால், நடிகர் சூர்யாவின் மார்க்கெட் என்பது எங்கே ஆரம்பித்ததோ.. அங்கேயே இருக்கிறது.. என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இந்த நிலைமையில் நடிகர் சூர்யாவுக்கு பாலா உடன் தகராறு தேவைதானா..? அவர்கள் செய்வதை அவர் சொல்வதை செய்து கொடுத்துவிட்டு போக வேண்டியதுதானே.. பாலா பற்றி புதிதாக யாரும் சொல்ல தேவை இல்லை.. நடிகர் சூர்யாவுக்கு இது தெரியாதா…? என்றெல்லாம் பலரும் சூர்யாவுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

நடிகர் சூர்யா நடிகர் விக்ரம் இருவரையும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து பிதாமகன் என்ற பிளாக்பஸ்டர் வெற்றி படத்தை கொடுத்தவர். இயக்குனர் பாலா சமீபத்தில் தன்னுடைய மகனை ஹீரோவாக அறிமுகம் செய்யும் பொறுப்பை பாலாவுக்கு கொடுத்த விக்ரம் அந்த படம் சரியாக வரவில்லை என்று அதனை குப்பையில் தூக்கி போட்டுவிட்டு வேறு இயக்குனரை வைத்து படத்தை எடுத்தார்.

இப்படி தன்னால் உருவாக்கப்பட்ட இரண்டு நடிகர்களும் தன்னுடைய முதுகில் குத்தி விட்டார்கள் என்ற வேதனையில் இருந்த பாலா தற்பொழுது அருண் விஜயை வைத்து வணங்கான் திரைப்படத்தை இயக்கு முடித்திருக்கிறார்.

இதையும் படிங்க : தமிழ் சீரியலில்.. இயக்குனர்களுக்கு இதை செய்தால் தான் வாய்ப்பு.. ஆனால்,.. ரகசியம் உடைத்த சீரியல் நடிகை பிரவீனா..!

இந்த படம் வெளியிட்ட தயாராக இருக்கிறது. இந்நிலையில், நடிகர் சூர்யாவிற்கும் பாலாவுக்கும் ஏற்கனவே ஒரு தகராறு நடந்திருக்கிறது. அதுவும் நந்தா படத்தில் என்ற விவரம் தற்போது வெளியே வந்திருக்கிறது.

இதனை கூறியவர் வேறு யாரும் கிடையாது பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யார் பாலு அவர்கள் தான்.

அவர் கூறியதாவது நந்தா படத்தில் ஜோடியாக நடிகை லைலாவை போடக்கூடாது என சூர்யா விடாப்பிடியாக இருந்திருக்கிறார் நடிகை ஜோதிகாவை இந்த படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யுங்கள் என்று பாலாவிடம் தயங்கி தயங்கி கேட்டிருக்கிறார்.

ஆனால் பாலா இலங்கையிலிருந்து அகதியாக வந்த ஒரு பெண் எப்படியான தோற்றத்தில் இருப்பார் என்ற ஒரு ஐடியா என்னிடம் இருக்கிறது. கண்டிப்பாக இந்த கேரக்டருக்கு ஜோதிகா செட்டாக மாட்டார்.. ஏன் ஜோதிகாவுக்கு ரூட்டு விடுறியா.. என்று சூர்யாவிடம் கறார் காட்டியிருக்கிறார் பாலா.

இதையும் படிங்க : வடிவேலு இதை பண்ணவே விட மாட்டான்.. மனுஷனே கிடையாது.. நடிகர் காதல் சரவணன் விளாசல்..!

அப்போதுதான் வளர்ந்து கொண்டிருந்த நடிகர் சூர்யா இயக்குனரிடம் வம்பு வளர்க்க வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டிருக்கிறார். இந்த விவகாரத்தை அறிந்து வைத்திருந்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் காக்க காக்க திரைப்படத்தில் நடிகை ஜோதிகாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துவிட்டு அதன் பிறகு தான் சூர்யாவிடம் கதை சொல்லி அவரை ஹீரோவாக்கினாராம்.