நீச்சல் உடையில்.. அருவில் குத்த வைத்து.. குளுகுளு போஸ்..! – சூட்டை கிளப்பும் நடிகை ஜோதிகா..!

கடந்த 1978ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் நடிகை ஜோதிகா. இவருடைய உண்மையான பெயர் சாதனா என்பதாகும். கடந்த 1998ஆம் ஆண்டு தன்னுடைய 19வது வயதில் டோலி சஜா கே ரக்னா என்ற இந்தி திரைப்படத்தில் பல்லவி சின்ஹா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு பெரிய வரவேற்பு கொடுத்து விடவில்லை.

எனவே இயக்குனர் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி என்ற திரைப்படத்தில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் மீனா என்றாலும் பெரும்பாலான காட்சிகள் இவரை சோனா என்று அழைப்பது போலவே இருக்கும்.

இந்தப் படம் வெளியான பிறகு நடிகை ஜோதிகாவை பலரும் சோனா என்று நினைவில் வைத்துக் கொண்டார்கள். அதன், பிறகு பூவெல்லாம் கேட்டுப்பார், முகவரி, குஷி, உயிரிலே கலந்தது, தெனாலி, சினேகிதியே.. என ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 8 படங்களில் நடித்தார் நடிகை ஜோதிகா.

இதனால் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இருந்தது. கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட நடிகை ஜோதிகா திருமணத்திற்குப் பிறகுகிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார் ஜோதிகா.

அதன்பிறகு 2015ஆம் ஆண்டு 36 வயதினிலே என்ற திரைப்படத்தில் தன்னுடைய இரண்டாவது சுற்றை ஆரம்பித்த நடிகை  ஜோதிகா அதன் பிறகு 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக உடன்பிறப்பே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஜோதிகா அதனுடைய இளமை காலங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். பொசுபொசுவென இருந்த இவர் ஒரு கட்டத்தில் தன்னுடைய உடல் எடையை குறைத்துக் கொண்டு ஒல்லியாக மாறினார்.

அதன்பிறகு நீச்சல் உடையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில், உடலோடு ஒட்டிய நீச்சலுடையில் அருகில் அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.