ஜோதிகா-வா இது..? – பதின்ம வயதில் பருவ மொட்டாக.. இருக்கிறாரே..! – வாயை பிளந்த ரசிகர்கள்…!

பிரபல நடிகை ஜோதிகா சினிமா உலகில் அடியெடுத்து வைத்த குறுகிய காலத்திலேயே நடிகர்கள் அஜித் சூர்யா விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தியவர்.

ஆரம்ப காலத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நடிகை ஜோதிகா நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஹிட்டடித்தது.

சினிமா ஹீரோயின் என்றால் ஒல்லியாக தான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியை சுக்கு சுக்கா உடைத்து நொறுக்கியவர் நடிகை ஜோதிகா. கொலுக்கு மொழுக்கு என இருந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா.

சினிமா உலகில் பேரும் புகழும் சம்பாதித்த நடிகை ஜோதிகா ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவுடன் காதல் வயப்பட்டு அவரை காதலித்து வந்தார். ஆரம்பத்தில் சூர்யாவின் குடும்பத்தில் நடிகை ஜோதிகாவின் காதலை ஏற்க மறுத்தனர்.

வேறு மதத்தை சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக நடிகை சூர்யாவின் தாய் கடுமையாக இந்த காதலை எதிர்த்தார் என்று கூறப்பட்டது. ஒரு வழியாக சூர்யா ஜோதிகா ஆகிய இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.

திருமணமான பிறகு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த நடிகை ஜோதிகா தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்து வரும் நடிகை ஜோதிகா தொடர்ந்து வெப்சீரிஸ் களிலும் நடித்து வருகிறார்.

தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டால் மீண்டும் சோலோ ஹீரோயினாக கலக்கலாம் என்ற ஆசையில் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி தொடர்ந்து வருகிறார் நடிகை ஜோதிகா.

இந்நிலையில் நடிகை ஜோதிகா இளம்வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஜோதிகாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

குறிப்பாக நடிகைகள் திரிஷா மற்றும் ரீமா சென்-உடன் ஜோதிகா நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …