டைட்டான உடையில்.. உடம்பை முறுக்கேற்றும் நடிகை ஜோதிகா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. ஆரம்பத்தில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா.

அழகாக இருப்பது மட்டுமில்லாமல் கொழுக்மொழுக் என்று இருந்ததால் இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. சினிமா உலகில் வெற்றியை ருசித்தாலும் ஒருபக்கம் பிரபல நடிகர் சூர்யாவுடன் ஒரு காதலில் இருக்கிறார் என்ற கிசுகிசு பலமாகவே அனைத்து பத்திரிகைகளிலும் எழுதப்பட்டு வந்தது.

அது உண்மைதான் என்று நாளடைவில் தெரியவந்தது. நடிகர் சூர்யா, ஜோதிகா ஆகியோரது காதல் வாழ்க்கை நன்றாக இருந்தாலும் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முயற்சித்தபோது நடிகர் சூர்யா வீட்டில் இருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.

குறிப்பாக நடிகர் சூர்யாவின் தாய் நடிகை ஜோதிகாவின் மதம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை காரணம் காட்டி ஜோதிகா நம்முடைய குடும்பத்திற்கு நிச்சயம் ஒத்து வரவே மாட்டார். இது சரிவராது என்று பயங்கரமான பிரச்சனை செய்திருக்கிறார். ஆனால் ஒருவழியாக அவரது சூர்யாவின் தாயை சமாதானம் செய்து திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.

சூர்யா ஜோதிகாவின் திருமணத்தில் நடிகர் கார்த்தியின் பங்கு மிகப் பெரியது. காரணம், அண்ணனின் காதலுக்கு சம்மதம் சொல்லுங்க.. நான் நீங்கள் பார்த்து வைக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இதன் பிறகு சற்றே மனம் குளிர்ந்து சூர்யா ஜோதிகா திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் நடிகர் சூர்யாவின் தாய். இதனை சூர்யாவின் தந்தையும் பிரபல நடிகருமான சிவகுமார் பல மேடைகளில் பதிவு செய்திருக்கிறார்.

தற்போது இரண்டு குழந்தைகளுடன் பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகள் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஜோதிகா சமீபகாலமாக மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் தொடர்ந்து ஹீரோ ஹீரோயின் என கமர்ஷியல் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இது சூர்யாவின் குடும்பத்தினருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று பேச்சு கிளம்பியது.

அதை தொடர்ந்து, படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டிருக்கிறார் நடிகை ஜோதிகா. மேலும், திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி குண்டான நடிகை ஜோதிகா தற்போது மீண்டும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு நடிகர் சூர்யா அளவுக்கு உடலை முறுக்கேற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

அந்த வகையில், உடற்பயிற்சி கூடத்தில் எடுத்துக்கொண்ட ஜோதிகாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை ஜோதிகா தன்னுடைய ஜிம் ட்ரெய்னருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …