Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சிம்பு என்னை விட சின்ன பையன்.. ஆனால், என் கல்யாணத்துக்கு அப்புறம் கூட.. ஜோதிகா ஓப்பன் டாக்..!

Tamil Cinema News

சிம்பு என்னை விட சின்ன பையன்.. ஆனால், என் கல்யாணத்துக்கு அப்புறம் கூட.. ஜோதிகா ஓப்பன் டாக்..!

சினிமாவில் எத்தனை கலைஞர்கள் வந்தாலும், போனாலும் சில நடிகர், நடிகைகள் அவர்கள் நடிக்கிற காலகட்டத்தில் தனக்கான இடத்தை ஏற்படுத்தி விட்டுச் செல்கின்றனர்.

எத்தனை காலம் ஆனாலும், அந்த இடத்தை விட்டு அவர்கள் சென்றாலும், அந்த இடம் நிரந்தரமாக அவர்களுக்காக இருக்கிறது. ரசிகர்கள் அந்த இடத்திலேயே அவர்களை வைத்து விடுகின்றனர்.

ஜோதிகா

நடிகை ஜோதிகா தமிழ் சினிமா நடிகைகளில் முன்னணி நடிகையாக, பல படங்களில் நாயகியாக நடித்தவர். இப்போது 40 வயதுகளிலும் கதாநாயகியாக பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

சூர்யா மனைவியாவதற்கு முன் ஜோதிகா, பல முக்கிய படங்களில் நடித்த வகையில் மிகப் பிரபல நடிகையாக பாராட்டப்பட்டார். குறிப்பாக சந்திரமுகி, பேரழகன், மொழி போன்ற படங்களில் ஜோதிகா நடிப்பு வேற லெவலில் இருந்தது.

--Advertisement--

நடிப்பு திகைக்க வைத்தது

பேரழகன் படத்தில், கண் பார்வையற்ற கூத்தாடி பெண்ணாகவும், மொழி படத்தில் வாய் பேசாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியாகவும், சந்திரமுகி படத்தில் மல்ட்டிபிள் பர்சனாலாட்டி நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாகவும் ஜோதிகா நடிப்பு ரசிகர்களை திகைக்க வைத்தது.

சில படங்களில் காமெடியாகவும், பல படங்களில் துருதுருப்பாகவும் ஜோதிகா நடிப்பு மிகவும் ரசிகர்களை ரசிக்க வைத்தது. குஷி, காக்க காக்க. பிரியமான தோழி, தெனாலி, சில்லுன்னு ஒரு காதல், டும்டும்டும், மாயாவி என பல படங்களில் ஜோதிகாவின் நடிப்பை பாராட்டாதவர்களே இருக்க முடியாது.

இதையும் படியுங்கள்: அப்பா மகன் என இருவருடனும் ஜோடி போட்ட நடிகை.. யாரு தெரியுமா..?

காதல் தி கோர்

ஜோதிகா சமீபத்தில் இந்தியில் நடித்து வெளிவந்த சைத்தான் படமும் வெற்றிப் படமாக இருக்கிறது. இதில் அஜய் தேவ்கன், மாதவன் நடித்திருந்தனர். அதே போல், மலையாள நடிகர் மம்முட்டியுடன் நடித்த காதல் தி கோர் படமும் பெரிய வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் நடிகர் சிலம்பரசனுடன் மன்மதன் படத்திலும், அதைத் தொடர்ந்து சரவணா என்ற படத்திலும் ஜோதிகா நடித்திருந்தார். திருமணத்துக்கு பிறகு செக்கச் சிவந்த வானம் படத்திலும் ஜோதிகா நடித்திருந்தார்.

நேர்காணல்

சமீபத்தில் விஜய் டிவி நேருக்கு நேர் கோபிநாத், நடிகை ஜோதிகாவை நேர்காணல் செய்தார். அப்போது சிலம்பரசனுடன் ஜோதிகா இருக்கிற புகைப்படங்களை காட்டி, அவருடன் நடித்த அனுபவங்கள் குறித்து கேட்டார்.

இதையும் படியுங்கள்: “அவன் கிட்ட நான் எதுக்கு இதை பண்ணனும்..” புருஷனை பக்கத்தில் வச்சிகிட்டே உதார் விட்ட எருமசாணி ஹரிஜா..!

சிம்புவை ரொம்ப பிடிக்கும்

அதற்கு பதிலளித்து ஜோதிகா கூறியதாவது, எனக்கு சிம்புவை ரொம்ப பிடிக்கும். அவரை ரொம்ப லைக் பண்ணுவேன். ரொம்ப வெளிப்படையான மனிதர். பழகுவதற்கு இனிமையானவர். நான் நடித்த படங்களை பார்த்துட்டு போனில் கூப்பிட்டு பாராட்டுவார்.

செக்க சிவந்த வானம் படத்தில் கூட நானும் அவரும் நடிச்சிருந்தோம். ஆனால் சேர்ந்து நடிக்கிற காட்சிகள் ரொம்ப கம்மியா தான் இருந்துச்சு. ரெண்டு மூனு சீன்தான் ஒண்ணா நடிச்சிருப்போம். சிம்பு எப்போதும் என்னுடன் தொடர்பில் இருப்பவர். அடிக்கடி என்னுடன் பேசுவார்.

இளம் ஹீரோ

மனதில் படுகிற விஷயம் எதுவாக இருந்தாலும், அதை வெளிப்படையாக பேசிவிடுகிற அவரது குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் நடித்த படங்களில் என்னுடன் நடித்த மிக இளம் ஹீரோ இவர்தான். அதாவது என்னை விட சின்ன பையன் சிம்புதான். கல்யாணத்துக்கு அப்புறமும் என்கூட பேசிட்டு இருக்கார்.

சிம்பு என்னை விட சின்ன பையன்.. ஆனால், என் கல்யாணத்துக்கு அப்புறம் கூட எங்களது நட்பு நீடிக்கிறது என, நடிகை ஜோதிகா இந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top