கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால்… – முதன் முறையாக வெளியான புகைப்படங்கள்..!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை காஜல் அகர்வால். அதிலும் குறிப்பாக தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே தெலுங்கில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ஆரம்பத்தில் சுமாராகவே இவரது படங்கள் ஓடினாலும் ஒருகட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றினார் அதிலிருந்து இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல அடையாளம் கிடைத்தது.

நயன்தாரா, சமந்தாவிற்கு அடுத்து டாப்பில் இருப்பவர் காஜல் அகர்வால். பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார்.

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காஜல் அகர்வால் தற்போது கர்ப்பம் ஆகியுள்ளார்.

---- Advertisement ----

குழந்தை, குடும்பம் என செட்டிலாகும் முடிவில் இருக்கிறார் அம்மணி என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், முதன் முறையாக கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

---- Advertisement ----