“அப்பப்பா… ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா..?” – காஜல் அகர்வால்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

காஜல் அகர்வால் : இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் சில விபத்துகள் காரணமாக தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட சிக்கலால் எப்பொழுது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்ற குழப்பத்துடன் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தியன் 2 படத்தை டேக் ஓவர் செய்து மீண்டும் படப்பிடிப்பின் வேலைகளை துரிதப்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை காஜல் அகர்வால் மீண்டும் இந்த திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் விபத்து நடந்த போது திருமணம் கூட செய்து கொள்ளாமல் இருந்த நடிகை காஜல் அகர்வால் தற்போது திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார். ஆனால், மீண்டும் ஏற்கனவே கமிட்டான திரைப்படங்களில் நடித்துக் கொடுக்கும் நடிகை காஜல் அகர்வால் புதிதாக எந்த படங்களிலும் கமிட் ஆகி இருக்கிறார்.

இருந்தாலும் நடிகர் கமல்ஹாசன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதை கனவாக கொண்டிருந்த நடிகை காஜல் அகர்வால் இந்த படத்தில் நடிப்பதை நிச்சயம் தவிர்க்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இதனை அகர்வாலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

குழந்தை பிறந்த பிறகு சற்று உடல் எடை கூடிய நடிகை காஜல் அகர்வால் தற்போது உடல் எடையை கணிசமாக குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறியுள்ளார். இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியன் திரைப்படத்தில் ஏற்கனவே பல முன்னணி நடிகைகள் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்கள். குறிப்பிடும்படியாக நடிகை ராகுல் பிரீத் சிங் மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் இந்த படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் தோன்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்து காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இது தமிழ் சினிமா வட்டாரங்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஷாக்காகி என்றுதான் கூறவேண்டும்.

கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் கழித்து இந்த திரைப்படம் வேண்டும் தொடங்கியுள்ளது. இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும் மீண்டும் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் உச்சகட்ட பாதுகாப்புடன் படப்பிடிப்பு பணிகள் முடிவடைய வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் தங்களது விருப்பத்தை பதிவு செய்து வருகின்றனர்.

நடிகை காஜல் அகர்வால் அவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு அம்மாவாக பிறகும் இப்படியா…? கண்டிப்பாக நீநட்க ஒரு குழந்தைக்கு அம்மா..! என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …