“உடலுறவில் இது அவசியம்.. மிகவும் முக்கியம்..” – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய கஜோல்..!

தங்கத் தாமரை மகளே.. வா அருகே.. என்று சாக்லேட் பாய் அரவிந்த் சாமியை தன் பின்னால் சுற்ற வைத்தவர் நடிகை கஜோல். தமிழில் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை கஜோல்.

அதன்பிறகு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்தில் முதலில் ஐஸ்வர்யாராய் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், இந்த படத்தின் முழு கதையையும் கேட்ட நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் வில்லிககான ரோல் சரியானதாக இல்லை கண்டிப்பாக இந்த வில்லி கதாபாத்திரம் எனக்கு செட்டாகாது என்று கூறி தவிர்த்து விட்டார்.

அதனைத்தொடர்ந்து நடிகை கஜோல் இடம் கதையைக் கூறி வில்லியாக நடிக்க வைத்திருக்கிறார் நடிகர் தனுஷ். திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ் களிலும் சமீபகாலமாக பல நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை கஜோல் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்திருக்கிறார் தி குட் வைஃப் ( The Good Wife ) என்ற வெப் சீரிஸ் நடித்திருக்கிறார். இந்த வெப்சீரிஸ் டிஸ்னி+ஹாட்ஸ்டார் OTT-இல் வெளியாக உள்ளது/ விரைவில் இந்த படம் குறித்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

பொதுவாக பாலிவுட் மீடியாக்களில் நடிகைகளிடம் விவகாரமான கேள்விகள் கேட்கப்படுவது அதற்கு பாலிவுட் நடிகைகள் எந்த கூச்சமும் இல்லாமல் பதில் அளிப்பதும் இயல்பான ஒன்று.

அந்த வகையில் நடிகை கஜோல் இடம் உடலுறவில் என்ன அவசியம் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை கஜோல் படுக்கையில் அன்பு என்பது மிகவும் முக்கியமானது. ஒவ்வொருவருக்கும் தன்னுடைய துணையுடன் இணையும் பொழுது உடலோடு உடல் இணைக்கிறது என்று எண்ணாமல் இரு மனங்கள் ஒன்றாக கலப்பது என்ற ஆத்மார்த்தமான உணர்வு இருவருக்கும் இருக்க வேண்டும்.

இந்த உணர்வு இருவரில் ஒருவருக்கு இல்லை என்றால் கூட அது நிச்சயமாக முழுமையான உடலுறவாக இருக்க முடியாது என்று ஆணித்தரமாக நான் நம்புகிறேன். எனவே ஒருவரை ஒருவர் மன ரீதியில் ஆத்மார்த்தமாக புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் அவருடைய தாம்பத்திய வாழ்க்கை மற்றும் இல்லற வாழ்க்கை சிறக்கும். இதனை பலரும் இன்று மறந்து விடுகிறார்கள் அல்லது அவர்களுக்கு தெரிவதில்லை.

இதனை கணவனும் மனைவியும் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களுடைய திருமண வாழ்க்கை நிச்சயமாக அழகாக இருக்கும் என நம்புவதாக கூறியிருக்கிறார்.

மேலும் தாம்பத்திய வாழ்க்கை அற்ற திருமண வாழ்க்கை நரகத்திற்கு இணையானது. இது ஒரு திருமண வாழ்க்கையே கிடையாது. அவர்களை கணவன் மனைவி என்று கூறுவது பொருத்தமாக இருக்காது. பரஸ்பரம் நடக்கும் தாம்பத்திய வாழ்க்கை தான் சிறப்பான ஒரு குடும்ப வாழ்க்கையை இருவரும் அமைதியான முறையில் கழிப்பதற்கு உதவும்.

ஒருவருடைய தாம்பத்திய தேவையை மற்றொருவர் புரிந்துகொண்டு நடந்து கொள்ள வேண்டும் அப்படி தவறும் பட்சத்தில் அங்கே பிரச்சனைகள் உருவாகின்றன. திருமண வாழ்க்கையே நரகம் ஆகிறது. அதிகபட்சம் 10 அல்லது 15 நிமிடங்கள் தானே.. கணவனின் ஆசையை மனைவியும்.. மனைவியின் ஆசையை கணவரும் புரிந்து கொண்டு நடந்து கொள்வதில் என்ன கெட்டு விட போகின்றது.

இதனை புரிந்து கொள்ளும் கணவன் மனைவி கண்டிப்பாக வரம் பெற்றவர்கள் என்று கூறியிருக்கிறார் நடிகை கஜோல்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

தன்னை விட 13 வயசு குறைவான நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா..! இதெல்லாம் நியாயமா..?

கேரளத்து பெண் அழகு என்று சொல்வது உண்மை என்பதால் தான் கேரளாவை சேர்ந்த பல பெண்கள் தமிழ் திரையுலகில் ஜொலித்து …