Actress | நடிகைகள்
முன்னணி நடிகரின் மகன் மீது காதல்..! – தீயாய் பரவும் மாநாடு பட நடிகை கல்யாணி-யின் புகைப்படம்..!
தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் மலையாள படத்திலும் அதிக அளவு நடித்திருப்பவர் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்(Kalyani Priyadarshan). பிரபலமான நடிகையான இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ஹீரோ படத்தில் 2019 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
இதனை அடுத்து இவரின் நடிப்புத் திறனை பார்த்து சிம்புவின் மாநாடு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியான வகையில் பயன்படுத்திக்கொண்ட இவர் இந்த படத்தில் பக்காவாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
kalyani-priyadarshan
மேலும் இவர் பிரபலமான மலையாள பட நடிகரான மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் கிருதயம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
இதனை அடுத்து பிரணவ் மோகன்லால் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இருவரும் ஒன்றாக இணைந்து சுற்றுலா சென்ற பகுதியில் எடுத்த புகைப்படங்களை தற்போது வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள்.
இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் படு வைரலாக ஆக பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து சினிமா உலகமே பிரணவ் மோகன்லால் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இருவரும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கள் எழுந்துள்ளது.
kalyani-priyadarshan
எனினும் இந்த கிசுகிசுக்கள் உண்மையானதா என்று தெரியாத நிலையில் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் இளைஞர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்திருக்கிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் இவர்கள் காதலிப்பது உண்மையா இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்பது போன்ற கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
kalyani-priyadarshan
இன்னும் சில ரசிகர்கள் வாரிசு நடிகரை வளைத்துப் போட்டிருக்கும் உங்களது சாமர்த்தியம், அபாரமானது என்று நக்கலாகவும், கொச்சையாகவும் கிண்டல் செய்து வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் இவர்கள் இருவரும் இதற்கு பதிலைத் தரும் பட்சத்தில் தான் இது போன்ற கேள்விகளுக்கு விரைவாக முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதை உணர்ந்து எப்போது இவர்கள் இதற்கான பதில் அறிக்கையை வெளியிடுவார்கள் என்று திரையுலகமே காத்து இருக்கிறது.
மேலும் சில ரசிகர்கள் காதல் எப்போது வரும் எப்போது செல்லும் என்று தெரியாது. அதற்கு இவர்களும் விதிவிலக்கல்ல என்பதை இவரது புகைப்படங்களை மெய்பித்து விட்டதாக கூறியிருக்கிறார்கள்.