ப்ப்பா… பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. – கொள்ளை அழகில் ஆளை மயக்கும் “மாநாடு” ஹீரோயின்..!

மாநாடு’ (Maanaadu) படத்தில் ஹீரோயினாக நடித்து, ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் (Kalyani Priyadharshan), லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நட்சத்திர தம்பதிகளாக கல்யாணி, தெலுங்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு நாகர்ஜூனாவின் மகன் அகிலுக்கு ஜோடியாக ‘ஹலோ’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இந்த எதிர்பாத்த அளவிற்கு வெற்றிபெறவில்லை என்பதால், ஒரு சிறு இடைவெளிக்கு பின், கடந்த 2019 ஆம் ஆண்டு சில தெலுங்கு படங்களில் நடித்தார்.அதே ஆண்டு, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமிழில் ‘ஹீரோ’படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால் இந்த படமும் படு தோல்வியை சந்தித்தது.எனினும் கடந்த மாதம் 25 ஆம் தேதி, சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘மாநாடு’ படத்தில் அழகிய பொம்மை போல் வந்திருந்தாலும், தன்னுடைய அழகாலும் கியூட் நடிப்பாலும் ரசிகர்களை வசீகரித்தார்.தற்போதைய இளம் நடிகைகள் போல்… சமூக வலைத்தளத்தில் படு ஆக்டிவாக இருக்கும் கல்யாணி ப்ரியதர்ஷன் அவ்வப்போது தன்னுடைய விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஆரஞ்ச் நிற சேலை கட்டி ஸ்லீவ் லெஸ் பிளவுஸ் அணிந்து, இவர் வெளியிட்டுள்ள வேறு லெவல் புகைப்படங்கள் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.ஓவர் மேக் அப் இல்லாமல்… துளியும் கவர்ச்சி காட்டாமல் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களில் புன்னகை பூவாக ஜொலிக்கிறார் கல்யாணி.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் விதத்தில் உள்ள புகைப்படங்கள்… வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு லீக்குகளையும் குவித்து வருகிறது.தற்போது இவரது கை வசம் ஒரு தமிழ் படங்கள் கூட இல்லை என்றாலும், அடுத்தடுத்து பல மலையாள படங்களில் நடித்துள்ளார்.

மேலும் மோகன் லால் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மரைக்காயர்’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …