இந்தியன் 2 : லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் படம் ஒரு மாபெரும் வெற்றி வெற்றியைப் பெற்று மிகப்பெரிய வசூலையும் கமலஹாசனுக்கு பெற்றுத்தந்தது. இந்த படத்தின் மூலம் இந்த வயதிலும் கமலஹாசன் திரையுலகில் மீண்டுமொரு கம்பேக் கொடுத்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்று சாதனை செய்தது.
இந்த பாக்ஸ் ஆபீஸ் கிட்டுக்கு அடுத்து கமலஹாசனின் கிடப்பில் கிடந்த அனைத்து படங்களும் தூசி தட்டி எடுக்கப் பட்டு மீண்டும் படப்பிடிப்புக்கள் நடக்கத் தொடங்கிவிட்டது. அதில் குறிப்பாக இந்தியன் 2 வை எடுத்துக்கொள்ளலாம். இந்த இந்தியன் 2 படத்தை இயக்குநர் சங்கர் இயக்கி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ஏற்கனவே கொரோனா காலத்தில் ஏற்பட்ட தடங்கலால் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த படம் தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளது.
இந்தப் படப்பிடிப்பில் கமலஹாசனின் பகுதிகள் அனைத்தும் படம்பிடித்து பட்டு வரும் வேளையில் இந்த படத்திற்காக அனல் தெறிக்கும் அரசியல் வசனங்கள், சமூகங்களில் நடக்கும் லஞ்ச அவலங்கள், அரசியல் அவலங்கள் பற்றிய வசனங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அத்தகைய வசனங்களையெல்லாம் கமலஹாசன் வேண்டும் என்று கேட்டிருந்தார். மேலும் தற்போது அரசியலில் ஈடுபட்டு வரும் கமலஹாசன் இதுபோன்ற வசனங்களை வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார்.
இதையடுத்து இந்த படத்தின் வசனங்களை பார்த்துவிட்டு உதயநிதி, கமலஹாசனிடம் இதுபோன்ற வசனங்கள் வேண்டாம். தயவுசெய்து மாற்றங்கள் செய்யுங்கள். ஏனென்றால் தானும் தற்போது அரசியலில் இப்போது ஈடுபட்டு வருவதாக இதுபோன்ற வசனங்கள் அவரின் அரசியல் வாழ்க்கையும் பாதிக்கும் என்பது போன்ற கோரிக்கைகளை வைத்துள்ளார். ஏற்கனவே இந்தியன்2 படப்பிடிப்பு நடப்பதற்கு பேருதவியாக இருந்த உதயநிதி ஸ்டாலின் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளை ஏற்று கமலஹாசன் அத்தகைய வசனங்களில் மாற்றம் செய்யும்படி கூறி விட்டார்.
தற்போது எழுத்தாளர் குழு ஒன்று விடியவிடிய பாடுபட்டு அந்த வசனங்களை மாற்றி இயல்பாக உள்ள ஒரு சில விஷயங்களை சுட்டிக்காட்டக் கூடிய வசனங்களை எழுத தொடங்கி விட்டார்களாம். எப்படி கமலஹாசன் இதற்கு சம்மதித்தார். இவருக்கும்….. என்பது போல அனைவரும் பேசி வருகிறார்கள். இதன் மூலம் பணம் பாதாளம் வரை பாயும் என்பதை நிருபித்து விட்டது.