கங்குவா [Kanguva] : பொன்னியின் செல்வன் படத்தைப் பார்த்து படு இம்ப்ரஸனான இயக்குனர்கள் அனைவருமே இதுபோல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது தமிழில் முன்னணி இடத்தில் இருக்கக்கூடிய நடிகராக சூர்யா [Suriya] மற்றும் சிவா [Siva] கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா [Kanguva].
இந்த படத்தின் பெயர் இந்தப் படத்தின் பெயரை கேட்டாலே சும்மா அதிருதல்ல என்று சொல்லக்கூடிய அளவு இவரது கூட்டணியில் வெளிவரக்கூடிய இந்த படத்தை தெறிக்க விட்டிருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். சுமார் பத்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்திற்கான டைட்டில் அண்மையில் தான் வெளிவந்து இருந்தது. பத்து மொழிகளில் உருவாகிய இந்த படத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரித்து இருக்கிறார்கள். இதில் சூரியா மிகச் சிறப்பான முறையில் நடித்திருக்கிறார் என்று கூறலாம்.
மேலும் இந்தத் திரைப்படமானது 3டி தொழில்நுட்பத்தில் உருவாக உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தை காண்பதற்கு மிகவும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே படத்திற்கான வியாபாரம் கை போடு போட்டு உள்ளது என்று கூறலாம்.
அடுத்து இந்த படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். இதற்கு காரணம் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்க பல ஓ டி டி நிறுவனங்கள் போட்டி போடுவது தான். இந்த போட்டியில் அமேசான் நிறுவனம் இந்த படத்தின் உரிமையை தட்டி சென்றுள்ளது.
ஏற்கனவே மிக பிரம்மாண்டமான படங்களையும் முன்னணி கதாநாயகர்களின் படங்களையும் தேடித் தேடிப் பார்த்து வாங்கும் அமேசான் நிறுவனம் இந்த படத்தையும் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. கங்குவா திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை சுமார் 80 கோடி அளவிற்கு விக்கப்பட்டுள்ளது.
அதுவும் தென்னிந்தியாவில் மட்டுமே இந்த அளவு தொகைக்கு இது வியாபாரமாக இருப்பதை பார்த்து அனைவரும் மூக்கின் மேல் விரலை வைத்து விட்டார்கள். இதனை அடுத்து மற்ற மொழிகளிலும் டிஜிட்டல் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.
அப்படி பார்த்தால் இதன் டிஜிட்டல் உரிமை நாம் எதிர்பார்க்கக் கூடிய அளவைவிட அதிகளவு எகிரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது போலவே சேட்டிலைட் உரிமைக்கான பிசினஸும் தற்போது படும் மரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் படத்தை எடுப்பதற்காக போட்ட மொத்த தொகையும் இந்த வியாபாரத்தின் மூலமே எடுத்து விட்டதால் இந்தப் படம் இன்னும் பல சாதனைகள் புரியும் என்று கூறலாம். அதற்கான அப்டேட்டை மிக விரைவில் பட குழு வெளியிடும் என்று தெரியவந்துள்ளது.