பைவ் ஸ்டார், வரலாறு போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கனிகா ( Kaniha ). திருமணத்துக்கு பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் மீண்டும் ரீஎன்ட்ரி ஆகி மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தனது தோழிகளுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றார். ஷார்ட்ஸ், ஸ்லீவ்லெஸ் டாப்ஸுடன் கடற்கரையில் சுற்றிதிரிவதை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டார்.
வழக்கமாக எந்த படத்தை இணையதள பக்கத்தில் வெளியிட்டாலும் உடனே நூற்றுக்கணக்கில் லைக் கொடுப்பவர்கள் உண்டு. ஆனால், நடிகை கனிகா ( Kaniha )முண்டா பனியன், லெக்கின்ஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இதுபோல் டிரஸ் அணிவது முறையல்ல எனவும், நீங்க ரொம்ப நல்ல பொண்ணு என்று நினைத்திருந்தோம். ஆனால் நீங்கள் அணிந்திருக்கும் உடையை பார்க்கும்போது கெட்டபெண் ஆகிவிட்டதுபோல் தெரிகிறது.
ஒரு குழந்தைக்கு அம்மா ஆனபிறகும் இந்த வயதில் இப்படி உடை அணிவது வெட்கமாக இல்லையா?‘ எனவும் ரசிகர்கள் கூறியிருந்தனர்.இதனால் கடுப்பான கனிகா, இதுபோன்ற உடை எந்த வயதுவரை எனக்கு வசதியாக இருக்கிறதோ அதுவரை அணிவேன்.
50 வயதில்கூட இப்படி நான் டிரஸ் செய்துகொள்வேன்.நான் தினமும் யோகா, உடற்பயிற்சி செய்கிறேன். அப்போது புடவை கட்டிக்கொண்டா உடற்பயிற்சிகள் செய்ய முடியும். எனக்கு 4 வயதில் மகன் இருக்கிறான்.
அவன் வளரும்போது உடையை வைத்து பெண்ணை எடைபோடும் குறுக்கு புத்திக்காரர்கள்போல் இல்லாமல் திறந்த மனதுடன் வளர்வான்’ எனகாட்டமாக கூறியுள்ளார் கனிகா.