தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனிகா. தமிழில் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் அம்மணி.
அதை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வரலாறு திரை படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார் இவருடைய பூர்வீகம் கேரளா என்பதால் மலையாள படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வந்தார் கனிகா.
தொடர்ந்து சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள இவர் தமிழில் ஒரு சீரியலிலும் நடித்து வருகின்றார்.
இணைய பக்கங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இயங்கும் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாவாடையை கழுத்துவரை கட்டிக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். முன்னதாக முன்னதாக ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இவ்வளவு கவர்ச்சியான உடைகளை அணிவது தேவையா..? என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு நான் விரும்பிய ஆடையை அணிவதற்கு எனக்கு உரிமை இருக்கின்றது.
இதைப் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்.. என்பதை மனதில் வைத்துக் கொண்டு என்னுடைய விருப்பத்திற்கு நானே முட்டுக்கட்டையாக இருக்க மாட்டேன். பெண்கள் அவர்கள் விரும்பிய ஆடையை அணிவதற்கு முழு உரிமை உண்டு சுதந்திரம் உண்டு.
ஆனால், அதனை பார்க்கும் ஆண்கள் எப்படி பார்க்க வேண்டும் என்பது அவர்களைப் பொறுத்தது கண்டிப்பாக என்னுடைய மகனை பெண்களை எப்படி கண்ணியமாக பார்க்க வேண்டும் என்று சொல்லி கொடுத்து வளர்ப்பேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.