“காசேதான் கடவுளடா” நிதர்சனமான உண்மையை மீண்டும் உங்களுக்கு சொல்ல வருகிறார் – நடிகர் சிவா .

ஒவ்வொரு நடிகருக்கும் நடிப்பதில் ஒரு பாணி இருக்கும் அந்த வரிசையில்”காசேதான் கடவுளடா” படத்தின் நடிகர் சிவாவை பற்றி சொல்ல வேண்டியதில்லை அவர் எதைச் சொல்ல வருகிறார் என்பதை அவர் பேசும் விதத்தில் இருந்து நமக்கு சிரிப்பை வரவழைத்து கருத்தைப் புரிந்துகொள்ள வைக்கும்படி இருக்கும்.

அந்த வகையிலே இவர் தற்போது 1972ஆம் ஆண்டு தேங்காய் சீனிவாசன் முத்துராமன் வெண்ணிறாடை மூர்த்தி மற்றும் மனோரமா நடித்த காசேதான் கடவுளடா என்ற படத்தின் ரீமேக்கில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஊர்வசி, கருணாகரன், யோகி பாபு, சிவாங்கி போன்ற பல முன்னணி நகைச்சுவை தூண்டக்கூடிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

படத்தின் கதையைப் பொறுத்தவரை ஒரு சித்தியிடம் இருந்து பெரும் பணத்தை கொள்ளையடிப்பதற்காக தனது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் கூட்டணி அமைத்து விடுகிறார்கள் பின்னர்  அங்கு நடக்கிறது என்பதை சுற்றிதான் கதை செல்கிறது இதில் சிவாவின் சித்தியாக ஊர்வசி நடித்திருக்கிறார்.

ஏறக்குறைய இந்தப் படத்தில் அனைத்து படப்பிடிப்புகளும் நடந்து முடிந்துவிட்ட தருவாயில் இந்த படம் எப்போது வெளிவரும் என்பதற்கான ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

படமானது வரும் அக்டோபர் 7ஆம் தேதியில் வெளிவரும் என்று திரைப்படக் குழு அறிவித்துள்ளது. இதன் டிரெய்லர் ஜூலை 2022 ல் வெளி வந்தது. இப்படத்தை  ஆர். கண்ணன் அவர்கள் இயக்குகிறார். இவர் ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை போன்ற குடும்பப் படங்களை தந்தவர். இவர் கதை அமைத்து இயக்க கூடிய படங்கள் அனைத்தும் மிகவும் ரசிக்கும்படி இருப்பது இயல்பான ஒன்றுதான்.

இப்படம் நிச்சயமாக அனைவரின் மனதை கவர்வது மட்டுமல்லாமல் மிகவும் நகைச்சுவையோடு சிரித்து  மகிழும்படி இருக்கும். “காசேதான் கடவுளடா” இப்படத்திற்கு என்.கண்ணன் இசையமைத்துள்ளார்.

எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய  தலைப்பில் உள்ள இப்படமானது மக்கள் மத்தியில் நகைச்சுவை பாடமாக ஒரு பெரிய இடத்தை பெறும்.நிச்சயமாக இக்கூட்டணி வெற்றி பெறும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து …