பலான மேட்டருக்காக பாங்காக் வரை நம்ம ஆளுங்க போறாங்க, அதனால… – கஸ்தூரியின் கும்மாங்குத்து..!

நடிகை கஸ்தூரி ( Kasthuri ) சமீப காலமான சமூக கருத்துக்கள் மற்றும் சர்ச்சையான விஷயங்களில் மூக்கை நுழைத்து வருகிறார். சில சமயம் இவரது பேச்சுகள் கடும் சர்ச்சையை கிளப்பி விடுகின்றன.

இந்நிலையில், தற்போது கொரோனா மீண்டும் பரவி வரும் நிலையில் முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படலாம் என்ற அச்சம் நிலவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மதுக்கடைகளை மட்டும் திறந்துவிட்ட அரசாங்கத்தை கேள்வி கேட்டுள்ளார் அம்மணி.

தண்ணியில்லாம தமிழகம் கூடாதாம்..

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு நீண்ட கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, தனியொருவனுக்கு தண்ணியில்லையினில் ஜகத்தினை அழித்திடுவோம்ங்கற அசுர வேகத்தோட அரசு உள்ளது.

தண்ணியில்லாம தமிழகம் இருந்திறக்கூடாதாம்.இது காவிரி பிரச்சினையா, முல்லை பெரியார் பிரச்சினையா , தமிழக மாவட்டங்களின் குடிநீர் பிரச்சினைக்கா என்று யாரும் தப்பா நினைச்சிறாதீங்க.

அதையெல்லாம் விட மிக முக்கியமான, மக்களுக்கு அத்தியாவசியமான, சமூகத்துக்கு தேவையான சாராய மேட்டர் இது..! இங்கே யாரும் பூரண மதுவிலக்கை கூட கோரவில்லை. கொரோனா தொற்று அதிகரித்து அச்சுறுத்தும் வேளையில், டீக்கடை கூட திறக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு மதுக்கடையை திறப்பது என்ன லாஜிக் என்றுதான் கேட்கிறோம்.

பள்ளிகள், கடைகள், சினிமா, கோவில் தேவாலயங்கள், ஏன் , பார்க்கு கடற்கரையை கூட மூடிவிட்டார்கள்.

நானே ஊத்தி கொடுக்கறேன்..

கோவிலிலும் உடற்பயிற்சிக்கூடத்திலும் எதிர்பார்க்கமுடியாத சுயக்கட்டுப்பாட்டை மதுக்கடையில் உத்திரவாதம் கொடுக்கிறது நமது அரசு..! அண்டை மாநிலத்துக்கு காசை கொடுக்காதே, பக்கத்துக்கு ஊருல போயி குடிக்கற அந்த பணத்தை எனக்கே குடு, நானே ஊத்தி கொடுக்கறேன் என்று சொல்கிறதா அரசு.

அடுத்தது இது போன்ற வருமான இழப்புக்களை தடுக்க என்னவெல்லாம் செய்யலாம்? எப்படியெல்லாம் கொள்கை முடிவு எடுக்கலாம்? பக்கத்துக்கு மாநிலத்தில் லாட்டரி, சூதாட்ட விடுதிகள் உள்ளன.

அதுக்கு பாங்காக் வரை போறாங்க..

அங்கு ஏன் நம்மாட்கள் போகவேண்டும், அதையும் இங்கே திறக்கலாம். உள்ளூரிலேயே எல்லாரும் லாட்டரியடிக்கலாம். கோவா நேபாள் ஸ்ரீலங்கா சிங்கப்பூர் போன்ற நாடுகளுகளில் கேசினோ உள்ளது. அண்டை நாட்டுக்காரனுக்கும் ஆப்பு வைச்சுடலாம். கள்ள மார்க்கெட்டில் கஞ்சா ஹெரோயின் போதை மருந்து விற்பனை அமோகமாக இருக்கிறது.

போதை பொருள் விற்பனை துறையில் அரசுக்கு நல்ல வரி வரும், மக்களுக்கும் தரமான போதை கிடைக்கும். அப்புறம்…. பலான விஷயங்களுக்காக பாங்காக் வரை போகும் நம்ம ஆளுங்க பணத்தை அங்கே செலவு பண்ணிடறாங்க. அதனால இதையும் அலோவ் பண்ணுங்க என்று காட்டமாக கூறியுள்ளார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து …