நடிகையை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் – சக நடிகை காவ்யா மாதவன் தூண்டுதல் அம்பலம்..!

கேரளாவில் பிரபல நடிகை சில வருடங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியது.

இதனையடுத்து நடிகையின் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 6 முக்கிய குற்றவாளிகளையும், நடிகையின் கார் ஓட்டுநரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் சில காலத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.

மேலும்,மும்பையில் உள்ள தடயவியல் நிறுவனமான லேப் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனத்திடமிருந்து மீட்கப்பட்ட ஹார்ட் டிஸ்க்கில் இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : “நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்..” – முழு தொடையும் தெரிய போஸ் – இளசுகளை அலறவிடும் நடிகை கஸ்தூரி..!

அதுமட்டுமின்றி, நீதிமன்றத்தில் திலீப் சமர்ப்பித்த 6 மொபைல் ஃபோன்களில் பல தரவுகளை அவர் அழித்ததும், அவரும் அவரது மைத்துனர் சூரஜும் பயன்படுத்திய ஃபோனில் வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் காவல் துறையினர் கூறுகின்றனர்.

வீடியோ ஆதாரங்கள் மட்டுமின்றி, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி திலீப்பின் வீட்டருகே சென்றதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது.

6 ஃபோன்களில் அழிக்கப்பட்ட, ஈரானைச் சேந்த கோல்சன் என்பவர் செய்த வாட்ஸ் அப் உரையாடல் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தரவுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால் நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் திலீப்புக்கு எதிரான பிடி மேலும் இறுகியுள்ளது.

கேரளாவில் பிரபல திரைப்பட நடிகை பாலியல் அத்துமீறல் வழக்கில், நடிகர் திலீப்பின் சகோதரி கணவன் சூரஜ் என்பவரும் அவரது நண்பர் சரத்தும் உரையாடும் 3 செல்போன் உரையாடல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அந்த ஆடியோக்கள் மூலம், பாலியல் அத்துமீறல் சம்பவத்தில் நடிகை காவ்யாமாதவனின் தூண்டுதல் இருப்பது அம்பலமாகி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு முக்கிய இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கும் சரண்யா …