கடந்த 2000ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் பிறந்தவர் இளம் நடிகை கயாடு லோஹர். மகாராஷ்டிராவில் இருக்கக்கூடிய கல்லூரி ஒன்றில் பிகாம் படித்து முடித்த இவர் மாடலிங் துறையில் அதிக ஈடுபாட்டுடன் ஈடுபட்டுவந்தார்.
அதன்படி மீடியாவின் வெளிச்சத்துக்கு வந்த இவருக்கு திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் தற்போது நடித்து வருகிறார் தமிழிலும் விரைவில் என்ட்ரி கொடுப்பார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த 2021ஆம் ஆண்டு முகில்பேட்டே என்ற கன்னட திரைப்படத்தில் அபூர்வா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு மலையாளத்தில் வெளியான பத்தொன்பதாம் நூற்றாண்டு என்ற மலையாளம் படத்தில் நங்கேலி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் கடந்த மாதம் 8ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் இவர் மீனவப் பெண்ணாக நடித்திருந்தார். அந்த அந்த படத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படங்களை தான் தற்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மேலும் தெலுங்கிலும் அல்லூரி என்ற படத்தில் நடித்து வருகிறார். மட்டுமில்லாமல் மராத்தியில் ஐ பிரேம் யூ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படி கடந்த வருடம் அறிமுகமாகி இருந்தாலும் கூட தற்போது மூன்று படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு படப்பிடிப்பு தளங்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வரும் இவர் விரைவில் தமிழ் சினிமாவுக்கும் இறக்குமதி ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் யாருமா நீ..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.