நடிகை கயல் ஆனந்தி ( Kayal Anandhi ), மிழ் சினிமாவில் அறிமுகமாகும் நாயகிகள், குடும்ப பாங்கான வேடங்களில் முதலில் நடித்தாலும் பின் கவர்ச்சிக்கு மாறி வரும் நிலையில், கவர்ச்சி இல்லாதா கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பது மட்டும் இன்றி, பட விழாக்களில் கலந்து கொள்ளும் போது புடவை அணிந்து சென்று ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
2014 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பொறியாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆனந்தி. ஆனால் அதற்கு முன்பே தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அதே வருடத்தில் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கயல் திரைப்படம் அவருக்கு கயல் ஆனந்தி என்ற அடைமொழியை கொடுக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பல வாய்ப்புகள் கிடைத்தன.
அதில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி வீரன், வெற்றிமாறனின் விசாரணை போன்ற படங்கள் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படி வெற்றியை பெற்றது. அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் சரியாக போகாததால் படவாய்ப்புகளும் பெரிய அளவில் கிடைக்கவில்லை.
சமீபத்தில் கூட அசிஸ்டன்ட் இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட கயல் ஆனந்தி தற்போது கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.தமிழில் சரியான வாய்ப்புகள் வராததால் தெலுங்கில் கவனம் செலுத்தும் கயல் ஆனந்தி தற்போது தெலுங்கு படம் ஒன்றில் இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி காட்சிகளில் நடிக்க உள்ளார்.
சமீபத்தில் வெளியான ஸ்ரீ தேவி சோடா சென்டர் என்ற படத்தில் படு மோசமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஷாக் ஆக்கினார். இந்நிலையில், தற்போது மீண்டும் கவர்ச்சி களம் இறங்கியுள்ள கயல் ஆனந்தியை பார்த்த ரசிகர்கள், பட வாய்ப்புக்காக இப்படியா.? என்று ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.