பட வாய்ப்புக்காக இப்படி கூடவா..? – கயல் ஆனந்தி-யை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் கயல் ஆனந்தி என்று பிரபலமானவர் நடிகை ஆனந்தி.

சமீபத்தில் நதி பட வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இவர் மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கருவாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் நதி இரண்டு மணி நேரம் இந்த கதையை நான் கேட்டேன். கதையைக் கேட்டவுடனேயே இந்த படத்தில் நான் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.

இந்த படத்தில் நடித்தது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. படமும் சிறப்பாக வந்திருக்கிறது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும் என்று நான் எப்பொழுதும் விரும்புகிறேன்.

நிச்சயம் அந்த வகையில் நதி திரைப்படமும் இருக்கும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. என்னுடைய படங்களுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு பெற்றுள்ள இந்தப் படங்களுக்கும் இந்த படத்துக்கும் கொடுக்க வேண்டும்.

மேலும் தொடர்ந்து நான் சினிமாவில் நடிப்பேன் என்று கேட்கிறார்கள். திருமணத்திற்கு பிறகும் நான் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் வருகிறேன். நல்ல கதையம்சம் கொண்ட பட வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக மறுக்காமல் நடிப்பேன். எண்ணிக்கையில் நிறைய படங்களில் நடிப்பதை விட விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களாக இருந்தாலும் நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

திருமணத்திற்கு பிறகு கொஞ்சகாலம் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருக்கலாம் என்று தான் நினைத்தேன். ஆனால், நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வரும்போது அதனை தவிர விட மனது ஒப்புக்கொள்ளவில்லை. எனவே தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

இதனை அறிந்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக தங்களுடைய கொள்கை முடிவை மாற்றி இருக்கிறீர்கள், பொதுவாக திருமணத்திற்கு பிறகு நடிகைகள் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி விடுவார்கள் அல்லது கவர்ச்சியாக நடிப்பதை குறைத்துக் கொள்வார்கள்.

ஆனால் திருமணத்திற்கு பிறகு நடிகை கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான ஸ்ரீதேவி சோடா சென்டர் என்ற திரைப்படத்தில் படு சூடான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை கயல் ஆனந்தி.

பட வாய்ப்புக்காக எந்தளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறார். ஆனால் அந்த கவர்ச்சி படத்திற்கும் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் தேவையானதாக தவிர்க்க முடியாததாக இருக்க வேண்டும் என்கிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள டைட்டானிக் என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய் டிவி பிரியங்கா மறுமணம்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா..?

VJ பிரியங்கா விஜய் டிவியின் சொத்து என கூறப்படும் அளவுக்கு அவரது பங்களிப்பு விஜய் டிவியில் அவ்வளவு முக்கியமானதாக இருந்துள்ளது. …