ஷூட்டிங் ஸ்பாட்டில் இந்த ரெண்டு விஷயத்தை கண்டிப்பா பண்ணுவேன்.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இறைவனாக அறிமுகமானார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நான் தவறாமல் செய்யக்கூடிய இரண்டு விஷயங்கள் இதுதான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பெருவாரியான ரசிகர்களையும் பெற்றார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்த திரைப்படம் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது. அதனை தொடர்ந்து பைரவா, சர்க்கார், தானா சேர்ந்த கூட்டம், சாமி ஸ்கொயர், உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமான நடிகையாக சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.

ஆடை வடிவமைப்பு பற்றிய இளநிலை பட்டம் பெற்றிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் முதலில் தன்னுடைய அப்பா தயாரிக்க கூடிய படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில் தான் ஆடை வடிவமைப்பு துறையை தேர்ந்தெடுத்து படித்திருக்கிறார்.

ஆனால், இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்படுத்திக் கொண்டு தற்போது சினிமாவில் ஹீரோயினாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷிடம் படப்பிடிப்பு தளத்தில் நீங்கள் தவறாமல் செய்யக்கூடிய விஷயங்கள் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை கீர்த்தி சுரேஷ் என்னுடைய முதல் படத்திலிருந்து நான் இவற்றை பின்தொடர்ந்து வருகிறேன். இது என்னுடைய அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தது.

படப்பிடிப்பு தளத்தில் நான் இரண்டு விஷயங்களை எந்த ஒரு விதிமுறை இல்லாமல் பின்பற்றுவேன். அது என்ன என்றால் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வந்து விடுவது.

படப்பிடிப்பு எத்தனை மணிக்கு என்று தெரிந்து கொண்டு அதற்கு முன்பே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவேன். ஏனென்றால் நேரம் என்பது இந்த துறையில் மிகவும் முக்கியமானது.

நாம் வந்த பிறகு சில காரணங்களால் படப்பிடிப்பு லேட் கூட ஆகலாம். அதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நம்மால் படப்பிடிப்பு எந்த ஒரு நிமிடம் கூட தாமதமாக கூடாது என்பதில் நான் கண்ணும் கருத்துமாக இருப்பேன்.

இரண்டாவது விஷயம் என்னவென்றால், படப்பிடிப்பு தளத்தில் படத்தின் இயக்குனராக இருந்தாலும் சரி, படப்பிடிப்பு தளத்தில் ஷேர் எடுத்து போடக்கூடிய கடைநிலை உதவியாளராக இருந்தாலும் சரி, அனைவரையும் ஒரே மாதிரி பார்க்க வேண்டும்.

இயக்குனரை பெரிய ஆள் போலவோ, இவர்களை ஏலமாகவோ பார்க்கவே கூடாது என்று என்னுடைய தாய் சொல்லிக்கொடுத்திருக்கிறார். எனக்கு இயல்பாகவே அந்த குணம் இருக்கிறது.

யாரையும் ஒரு இடத்தில் அதிகபட்சமாக மரியாதை கொடுத்தோ அல்லது கீழ் மட்டத்தில் வேலை செய்யக்கூடிய நபர்களை ஏளனமாக பார்ப்பதோ இந்த பழக்கம் என்னுடைய சிறுவயது முதலே கிடையாது.

ஆனால் படப்பிடிப்பு தளத்தில் இப்படி இருக்கவே கூடாது என்று என்னுடைய தாய் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். எனவே படப்பிடிப்பு தளத்தில் இருக்கக்கூடிய அனைவரையும் ஒரே கண்ணோட்டத்துடன் தான் பார்ப்பேன், அனைவரிடமும் மரியாதையுடன் தான் நடந்து கொள்வேன் என கூறியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …