படுக்கையில் நண்பரை கட்டிப்பிடித்தபடி.. டிசம்பர் குளிரை சமாளிக்கும் கீர்த்தி சுரேஷ்..! – வைரல் போட்டோஸ்..!

இதுவரை 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ). தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, செல்வராகவனுடன் சாணிகாகிதம் படங்களில் நடித்து முடித்து உள்ளார். அண்ணாத்த படத்தில் ரஜினியின் தங்கையாக அவர் நடித்து இருந்தார்.இந்த படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வந்து கலவையான விமர்சனத்தை பெற்றது.

தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு ஜோடியாக சர்காரி வாரி பாட்டா படத்தில் நடிக்கிறார்.இன்னொரு தெலுங்கு படமும், மலையாள படமும் கைவசம் உள்ளது. இந்த நிலையில் தசரா என்ற தெலுங்கு படத்தில் நானி ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேசை அணுகினர்.

அந்த படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் அதிக சம்பளம் கேட்டதாகவும், இறுதியில் ரூ.3 கோடிக்கு உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய படங்களில் கீர்த்தி சுரேஷ் ரூ.2 கோடியில் இருந்து ரூ.2.5 கோடி வரை வாங்கியதாக கூறப்படுகிறது.தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

மகாநடி திரைப்படம் மூலமாக ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யப்பட வைத்தார். மகாநடி படத்தில் சாவித்ரியாகவே வாழ்ந்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து ராக்கெட் வேகத்தில் மார்க்கெட்டும் எகிறியது.ஆனாலும் சற்றும் நிலை தடுமாறாத கீர்த்தி சுரேஷ் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் பெண்குயின், மிஸ் இந்தியா போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

---- Advertisement ----

குடும்பப்பாங்கினியாக நடித்தாலும் கிளாமருக்கு கொஞ்சமும் குறை வைக்காத அம்மணி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது சட்டையை கழட்டி விட்டு படு சூடாக கொழுக் மொழுக் என இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. மேலும், தன்னுடைய  நைக்கி நாயை கட்டிபிடித்தபடி படுத்துக்கொண்ட.. ” டிசம்பர் குளிருக்கு அரவணைக்க சிறந்த நண்பர்.. ” என்று கேப்ஷன் வைத்துள்ளார்.

---- Advertisement ----