Actress | நடிகைகள்
ஒருவேளை “அதை” விரும்ப ஆரம்பிசுட்டேன் போல இருக்கு..! – சொக்க வைக்கும் அழகில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!
தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய மொழிகளில் தனக்கு என்று ஒரு ரசிகர்கள் படையை உருவாக்கி விட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) ஒரு வாரிசு நடிகை.
இவரின் அம்மா மலையாள திரை உலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர். அந்த வகையில் தற்போது இவரது மகளான கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாநாயகியாக திகழ வேண்டும் என்று முழுமூச்சாக செயல்பட்டு வருகிறார்.
இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் இவரது நடிப்பை பறைசாற்றும் விதத்தில் அமைந்திருந்தது. குறிப்பாக நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டையும் பெற்றுவிட்டார்.

Keerthy Suresh
தமிழில் இவர் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் தமிழில் முன்னணி கதாநாயகராக திகழும் இளைய தளபதி விஜய், சீயான் விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.
மேலும் இவர் தெலுங்கில் நடித்த மகாநடி திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றிருக்கிறார் இந்த படம் இவரது கேரியரில் ஒரு மிகப்பெரிய மைல்கள் என்று கூறலாம்.
அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் இவர் நானியோடு ஜோடி சேர்ந்து நடித்த தசரா திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் கிட் ஆகி 100 கோடிக்கு மேல் வசூல் புரிந்து சாதனை படைத்தது. இதனை அடுத்து தெலுங்கில் படு பிஸியாக இருக்கும் இவர் போலோ சங்கர் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவர் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார்.

Keerthy Suresh
அது மட்டுமல்லாமல் தமிழைப் பொறுத்தவரை இவர் மாரி செல்வராஜ் இயக்கி வரும் மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினோடு ஜோடி சேர்ந்திருக்கிறார். இந்தத் திரைப்படம் இவருக்கு மிக நல்ல பெயரை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் நடிப்பில் இவருக்கு விருதினையும் பெற்றுக் கொடுக்கலாம் என்று கோடம்பாக்கமே பேசி வருகிறது.
மேலும் இவர் ஜெயம் ரவியோடு ஜோடி சேர்ந்து சைரன் என்ற படத்திலும், ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா போன்ற அரை டஜன் தமிழ் படங்களுக்கும் மேல் கைவசம் வைத்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் தனது மேனி அழகை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

Keerthy Suresh
சொக்க வைக்கும் சொப்பன சுந்தரி போல இவரது மேனி அழகு உள்ளது என்று பல ரசிகர்களும் பல்வேறு வகையில் இவரை வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.
பிங்க் கலரில் பக்குவமாக காட்சி தந்து இருக்கும் இவரது புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் இதயத்திலும் இடம் பிடித்து விட்டது.
இதனை அடுத்து எந்த புகைப்படங்களை ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் அதிகளவு லைக்குகளை பெற்றிருக்கும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
You must be logged in to post a comment.