தமிழ்-ல பேசுங்க மேடம்.. என்று கேட்ட பத்திரிக்கையாளர்..! – கீர்த்தி சுரேஷ் கொடுத்த நக்கல் பதிலை பாருங்க..!

நடிகை கீர்த்தி சுரேஷிடம் ( Keerthy Suresh ) தமிழில் பேசுங்கள் என்று கேட்ட பத்திரிகையாளரிடம் கீர்த்தி சுரேஷ் கூறிய பதில் இணைய பக்கங்களில் ட்ரெண்டாகி வருகிறது இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இது என்ன மாயம்.

இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக படத்தின் ஹீரோயினாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்துவிடவில்லை.

ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது.

தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்து ரெமோ என்ற திரைப்படத்தில் நடித்த திரைப்படம் உங்களுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.

keerthy suresh
keerthy suresh

அதனை தொடர்ந்து குறுகிய காலத்திலேயே நடிகர்கள் விஜய் விக்ரம் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்றார் நடிகை கீர்த்தி சுரேஷ் .சினிமா பின்புலத்தைக் கொண்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ் என்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது என்ற கருத்து நிலவியது.

கீர்த்தி சுரேஷ்-க்கு நடிப்பு என்றால் என்னவென்று தெரியாது என்ற விமர்சனங்களும் பொதுவெளியில் ரசிகர்களால் வைக்கப்பட்டது. ஆனால், அந்த கருத்து எல்லாம் பொய்யானது என்று கூறும் வகையில் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான மகாநடி என்ற திரைப்படத்தில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

keerthy suresh
keerthy suresh

இந்த படத்தில் நடித்த பல்வேறு மாநில அரசுகளின் விருதை தட்டிச் சென்றார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குவிய குவிய நடிகை கீர்த்தி சுரேஷின் ஆடையின் அளவும் குறைந்து கொண்டே வருகிறது.

ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிவந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

மட்டுமில்லாமல் படங்களிலும் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கிறார். இந்நிலையில், நடிகர்கள் பகத்பாசில், வடிவேலு, தமிழக் சட்டமன்ற உறுப்பினரும், விளையாட்டு துறை அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகவும் படத்தின் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

keerthy suresh
keerthy suresh

இந்த திரைப்படம் ஜூன் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவு பெற்றது. இந்நிலையில், குட்ம்பதினருடன் திருப்பதி சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் அங்கே செய்தியாளர்களிடம் தெலுங்கில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு தமிழ் பத்திரிக்கையாளர் தமிழில் பேசுங்க மேடம் என்று கேட்க அவரை பார்த்து சிரிப்பை உதிர்த்து விட்டு திருப்பதியில் இருக்கேன் என நக்கலாக பதில் அளித்தார். இவருடைய இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

போடு தக்காளி.. ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் வெளியானது..! வேற லெவல் வெறித்தனம்..!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு …