படிக்காதவன் திரைப்படத்தில் நடிகர் விவேக் ஒரு காமெடி காட்சியில் படத்தின் வில்லனை சந்திக்க சென்று நீண்ட நேரம் கழித்து திரும்புவார்.
அப்போது நடிகர் தனுஷ் இவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்..? என்று கேட்பார். அதற்கு, ஏரியா பிரிக்கிறதை பற்றி பேசிட்டு இருந்தோம் என்று சொல்லுவார் விவேக்.
அதனை தொடர்ந்து பிரிச்சிட்டீங்களா..? என்று தனுஷ் கேட்பார். அதற்கு விவேக் பிரிச்சுட்டாங்க.. என்று அழுத்தி சொல்லிவிட்டு கம் ஆன் மை பாய்ஸ் என்று நடந்து செல்வார்.
அதன்பிறகு தான் எதை பிரித்தார்கள் என்று ரசிகர்களுக்கு தெரிய வரும். அதுபோல நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சைமா விருதுகள் விழா 2023-ல் கலந்து கொள்ள வந்திருந்தார்.
நீல நிற கோட் சூட் சகிதமாக மாஸாக வந்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால், அவருடைய பின்னால் தன்னுடைய முதுகின் அழகும் இடுப்பின் அழகும் ரசிகர்களுக்கு தெரியும்படி பெரிய ஓபன் வைத்திருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் படிக்காதவன் விவேக் காமெடி-யுடன் இதனை ஒப்பிட்டு கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.