அடங்கப்பா டே..! – கீர்த்தி சுரேஷ் கட்டியுள்ள ஒற்றை வாட்ச்சின் விலை..! – மயக்கம் போட்ட ரசிகர்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.,

பிரபல நடிகை மேனகா மற்றும் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்ததால் எளிமையாக சினிமா துறைக்குள் நுழைந்து விட்டார்.

அறிமுகமான புதிதில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து இலசுகளின் வால்பேப்பராக குடியேறிய நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்றார்.

இடையில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து தன்னை ஒரு நடிகை என நிரூபித்தார். இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

அதில் அவர் கட்டியிருந்த வாட்சைப் பார்த்து ரசிகர்கள் ஈர்க்கப்பட்டனர். அந்த வாட்ச்சின் விலை ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது.

அந்த வாட்ச் கடந்த 1953 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது வரை விற்பனையாகிக் கொண்டிருக்க கூடிய ஒரு வாட்ச்.

ஸ்டைலாகவும், விண்டேஜ் லுக்கிலும், பெருமிதத்தையும் அள்ளிக் கொடுக்கும் இந்த வாட்சுக்கு தற்போது வரை நல்ல டிமாண்ட் இருக்கிறதாம்.

குறிப்பிட்ட அளவில் மட்டுமே தயாரிக்கப்படுவதால் பயன்படுத்திவிட்டு விற்பனை செய்யக்கூடிய செகண்ட்ஹேண்ட் வாட்ச்களே 15 லட்சத்தை தாண்டும், பயன்படுத்திய வாட்ச்சை விற்க நினைத்தால் அதனை ரோலக்ஸ் நிறுவனமே வாங்கிக்கொள்ளும் Buy-Back வசதியும் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷின் வாட்சின் விலை என்ன என்று இணைய பக்கத்தில் தேடிய போது அந்த வாட்ச்சின் மாடல் Roles Datejust 36 என்பது அதனுடைய விலை 17 லட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய் என்று தெரிய வந்திருக்கிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் ஒரு நிமிடம் மயக்கமே போட்டு விட்டார்கள் என்று கூற வேண்டும். எங்களுடைய மாத சம்பளமே 20,000 ரூபாய் தான் கூட்டி கழித்து பார்த்தால் இந்த ஒரு வாட்ச்சை வாங்க 7.5 வருடங்கள் உழைக்க வேண்டியது இருக்கிறது.

ஆனால் மாதம் 20 ஆயிரம் ரூபாயை வைத்து எங்கள் குடும்பமே வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு நடிகையான கீர்த்தி சுரேஷ் தன்னுடைய கையில் இவ்வளவு லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை சாதாரணமாக கட்டிக் கொண்டிருக்கிறார். கொடூரமான உலகம் என்று புலம்பி தள்ளி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …