முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்..? – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிவந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சினிமா பயணத்தை தொடரும் வகையில் தன்னுடைய கவர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.

சமீபகாலமாக இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்னும் பெயரிடப்படாத தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்று தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது ரசிகர்களை ஷாக்காக்கி இருக்கின்றது. ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிவந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ரங் தே என்ற திரைப்படத்திலும் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான சர்க்காரு வாரி பாட்டா என்ற படத்திலும் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிவந்த நடிகை கீர்த்தி சுரேஷா இது..? என்று தமிழ் சினிமா ரசிகர்களும் ஒரு நிமிடம் வாயை பிளந்தார்கள். கடந்த 2013ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த கீதாஞ்சலி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

ஆனால், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு நடிகை கீர்த்தி சுரேஷின் தமிழ் மார்க்கெட் மின்னல் வேகத்தில் பறந்தது. தொடர்ந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வாய்ப்பை பெற்றார்.

கடைசியாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் நடிகை கீர்த்தி தெலுங்கு படமொன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும் அக்கட தேசத்து ஊடகங்களில் இந்த செய்தி அதிகம் பேசப்பட்டு வருகின்றது. முன்னதாக நடிகை கீர்த்தி சுரேஷ் நீச்சல் உடையில் நடிக்க நான் தயாராக இல்லை.. கண்டிப்பாக நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன்.. எனக்கு என்று ஒரு லிமிட் இருக்கிறது. அந்த லிமிட்டிற்குள் தான் நடிப்பேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கெஞ்சியிருக்கேன்.. தொலைகாட்சியில் நடந்த கொடுமை..! அனிதா சம்பத் ஓப்பன் டாக்..!

ஒருவருக்கு அதிர்ஷ்டம் என்றால் எங்கே எப்போது? எங்கிருந்து எதன் மூலமாக தேடி வரும் என யாராலும் கணிக்கவே முடியாது. திடீரென …