“தலையில என்ன கொம்பு மொழச்சிருக்கு…” – கீர்த்தி சுரேஷின் கிருஸ்துமஸ் க்யூட் போட்டோஸ்..!

கோலிவுட்டில் புகழ்பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh). இவர் தற்பொழுது ‘பாலிவுட்’டில் நடிக்க உடல் எடை யைக் குறைத்ததுடன் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக உள்ளார். அதைக் கேள்விப்பட்ட ‘கோலிவுட்’ அதிர்ச்சியில் இருக்கிறது.

‘சாவித்ரி’ வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்ற நடிகை, ‘கோலிவுட்’டில் நாகரிக உடை அணிந்தாலும் அதிலும் கவர்ச்சி வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.இவர் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றில் பிரமாதமாக நடித்தார்.

ஆனால் அதன் பிறகு அவர் நடித்த ‘சர்கார்’ படத்தில் அவருக்கு சரியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அதனால் இனி தனக்கு முக்கியத் துவம் இருக்கும் படங்களில் மட்டும் நடிக்கப்போவதாக கூறி, அதுபோன்ற கதைக்காகக் காத்திருந்தார்.

ஆனால் அவர் எதிர்பார்த்த கதை ஒன்றும் அவருக்குக் கிடைக்கவில்லை. சில மாதங்களாக எந்தப் படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் போனி கபூர் தயாரிப் பில், அஜய் தேவ்கனுடன் ‘பாலிவுட்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, படப்பிடிப்பு தற்பொழுது நடந்துகொண்டு இருக்கின்றது.

இந்தி நடிகைகள் ஒல்லியாக கவர்ச்சியாக நடிப்பதைப்போல தானும் நடிக்க முடிவெடுத்து கடும் உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையைக் குறைத்து ஒல்லியாக மாறியிருக்கிறார். அத்துடன் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்று அவர் ‘பாலிவுட்’டில் கூறியதாக செய்திகள் வெளிவருகின்றன.

---- Advertisement ----

 

கீர்த்தி சுரே‌ஷின் மெலிந்த உடலமைப்பைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர்.ஆனால், உடல் எடை குறைத்தால் அதிக பட வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்த அவர்க்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் நினைத்ததற்கு நேர்மாறாக படவாய்புகள் குறைந்து விட்டன.

அதற்கு காரணம்,எங்களுக்கு பஸ்ட்டியான கீர்த்தி சுரேஷ் தான் வேண்டும் ரசிகர்கள் அடம் பிடித்தது தான். இதனால், தற்போது மீண்டும் உடல் எடை ஏற்ற துவங்கியுள்ளார் அம்மணி. இந்நிலையில், தற்போது கிருஸ்துமஸ் ஸ்பெஷலாக தன்னுடைய வீட்டில் கிருஸ்துமஸ் கொண்டாடிய க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

---- Advertisement ----