கேரளா பருப்பு குழம்பு

புரோட்டின் சத்து உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று எந்த சத்து இருந்தால் தான் உடல் நன்கு வளர்ச்சி அடையும் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட புரோட்டின் சத்து நிறைந்த கேரள பருப்பு குழம்பு எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு 1/2 கப்

சின்ன வெங்காயம்  5 (நறுக்கியது)

மஞ்சள் தூள்  1/4 டீஸ்பூன்

தண்ணீர்  தேவையான அளவி

நெய்  1 டீஸ்பூன்

உப்பு  தேவையான அளவு

 அரைப்பதற்கு

துருவிய தேங்காய்  1/4 கப்

பச்சை மிளகாய்  1

சீரகம்  1/4 டீஸ்பூன்

 தாளிப்பதற்கு

தேங்காய் எண்ணெய்  2 டீஸ்பூன்

கடுகு   1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை  சிறிது

வரமிளகாய்  1

 செய்முறை: 

முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து குக்கரில் போட்டு, சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை அடுப்பில் வைத்து 2 3 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியில் மசித்த பருப்பை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும்.

குழம்பில் இருந்து பச்சை வாசனை போனதும், மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் குழம்புடன் சேர்த்து, அதில் ஊற்றி கிளறினால், கேரளா பருப்பு குழம்பு ரெடி.

கேரளா பருப்பு குழம்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள். மேலும் இதில் பாசிப்பருப்பு பயன்படுத்தப்பட்டு இருப்பதால் உடல் குளிர்ச்சி அடையும் என்பதை உணர்ந்து வெயில் காலத்தில் இந்த குழம்பை வைத்து உங்கள் குடும்பத்தோடு சுவைத்துப் பாருங்கள்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …