படத்துல Goosebumps ஓ.கே..! – படம் முழுக்க Goosebumps-னா எப்படி..? – தெறிக்கும் KGF 2 – திரைவிமர்சனம்..!

கேங்ஸ்டர் இல்லை மான்ஸ்டர் என முதல் பாகத்திலேயே தனது ஆளுமையை அதிரடி ஸ்டன்ட்டுகள் மற்றும் ஆக்‌ஷனில் காட்டிய ராக்கி பாய் இரண்டாம் பாகத்தில் என்ட்ரி கொடுக்கும் காட்சியிலேயே ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளி உள்ளார்.

வயலென்ஸ் தனக்கு பிடிக்காது என்றும் ஆனால், வயலன்ஸுக்கு தன்னை பிடிக்கிறது என்றும் அவர் சொல்லும் காட்சிகள் டிரைலரை விட அதை எந்த இடத்தில் திரையில் சொல்லுகிறார் என்கிற காட்சி அட்டகாசம்.

முதல் பாகத்தில் அதிகம் உழைத்து விட்டோம். இரண்டாம் பாகத்தில் லேசாக நடித்தால் போதும் என நடிக்காமல், இந்த பாகத்திலும் முழு உழைப்பை கொட்டி நடித்திருக்கிறார் நடிகர் யாஷ்.பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் கே.ஜி.எஃப். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது.

யாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் இப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்களும் டுவிட்டரில் படம் குறித்து பதிவிட்ட வண்ணம் உள்ளனர். கேஜிஎஃப் சாப்டர் 2வுடன் கேஜிஎஃப் சகாப்தம் முடிகிறதா? என்று பார்த்தால் அதுதான் இல்லை. கேஜிஎஃப் சாப்டர் 3க்கான விஷயத்தை கிளைமேக்ஸில் யார் பார்ப்பது போன்ற காட்சி செம ட்விஸ்ட். 3ம் பாகத்தில் மீண்டும் ராக்கி பாயின் ஆட்டம் எப்படி தொடரப் போகிறது.

எத்தனை பேர் அவருக்கு எதிரிகளாக வரப் போகிறார்கள், இன்னும் எத்தனை பாகம் இந்த படம் இருக்கும் என்பது இயக்குநர் பிரசாந்த் நீல்-க்குத்தான் வெளிச்சம். உச்சகட்டமாக, ஒரு காட்சியில், டன் கணக்கில் தங்கம் இருக்கும் இடத்திற்கு ரைடு வந்த அதிகாரிகளிடம் இருந்து மொத்த தங்கத்தையும் காப்பாற்றுகின்றனர் ராக்கி பாயின் ஆட்கள்.

ஆனால், தவறுதலாக ஒரே ஒரு தங்க பிஸ்கட்டை மட்டும் அவர்கள் தவறுதலாக விட்டுவிட அதனை ரைடு வந்த அதிகாரிகள் எடுத்துசென்று விடுகின்றனர். மொத்த தங்கத்தையும் காப்பாற்றி விட்டோம் என ராக்கி பாயின் ஆட்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். ஆனால், அதிகாரிகள் எடுத்துச்சென்ற அந்த ஒரே ஒரு தங்க பிஸ்கட்டை மீண்டும் தனாதாக்க ராக்கி பாய் ஆடும் ஆட்டம் வெறித்தனத்தின் உச்சம்.

படம் முழுக்க கூஸ்பம்ஸ்.. சற்றும் யூகித்து கூட பார்க்க முடியாத க்ளைமாக்ஸ்.. சில நொடிகள் கண்களில் ஈரத்தை ஏற்படுத்தி செல்கிறது. மொத்தத்தில் கேஜிஎஃப் சாப்டர் 2 தியேட்டரில் மிஸ் பண்ணக் கூடாத படம்..!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

உடல் எடை கூடி.. ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் லட்சுமி மேனன்.. வைரலாகும் வீடியோ..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லட்சுமிமேனன். இவர் முதல் படத்திலிருந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து …